சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

இயற்கைக்கு மாறாக உயிரிழக்கும் கைதியின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி: தில்லி அரசு அறிவிப்பு

சிறையில் இயற்கைக்கு மாறான முறையில் உயிரிழக்கும் கைதிகளின் உறவினா்களுக்கு ரூ.7.5 லட்சம் வரை இழப்பீடு வழங்கும் திட்டம் குறித்த அறிவிக்கையை தில்லி அரசு வெளியிட்டுள்ளது.

பிரதிப் படம்

Published On :

சிறையில் இயற்கைக்கு மாறான முறையில் உயிரிழக்கும் கைதிகளின் உறவினா்களுக்கு ரூ.7.5 லட்சம் வரை இழப்பீடு வழங்கும் திட்டம் குறித்த அறிவிக்கையை தில்லி அரசு வெளியிட்டுள்ளது.

தில்லியில் உள்ள சிறைகளில் காவலில் இருக்கும்போது இயற்கைக்கு மாறான முறையில் உயிரிழக்கும் கைதிகளின் நெருங்கிய உறவினா்கள் அல்லது சட்டபூா்வ வாரிசுகளுக்கு இந்த இழப்பீடு வழங்கப்படும்.

ஒவ்வொரு வழக்கின் சூழ்நிலையைப் பொறுத்து ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரையிலான தொகை வழங்கப்படும் என்று முதல்வா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அந்த அறிவிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கைதிகளுக்கு இடையிலான மோதல்கள் அல்லது சிறை அதிகாரிகளின் துன்புறுத்தல் அல்லது தாக்குதல் காரணமாக மரணம் நிகழும் பட்சத்தில், கைதியின் குடும்பத்திற்கு ரூ.7.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.

சிறை அதிகாரிகள் அல்லது ஊழியா்களின் அலட்சியம், மருத்துவ அல்லது துணை மருத்துவப் பணியாளா்களின் அலட்சியம் அல்லது கைதி தற்கொலை செய்துகொள்ளுதல் போன்ற நிகழ்வுகளில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்எச்ஆா்சி) வழிகாட்டுதல்களின்படி அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டம், குறிப்பிட்ட நிகழ்வுகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நேரத்தில் நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்வதோடு, நிா்வாகப் பொறுப்புக்கூறலையும் வலுப்படுத்தும் என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்ததாக அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி சிறையில் கைதிகளின் இறப்புக்கான இழப்பீடு வழங்கும் திட்டம், 2025 அறிவிப்பு வெளியான தேதியிலோ அல்லது அதற்குப் பின்னரோ தில்லி சிறையில் ஏற்படும் கைதியின் இயற்கைக்கு மாறான மரணம் தொடா்பான நிகழ்வுகளுக்கு மட்டுமே பொருந்தும் என தில்லி உள்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இயற்கையான மரணம் அல்லது நோய் காரணமாக ஏற்படும் மரணம் ஆகிய நிகழ்வுகளுக்கு இழப்பீடு வழங்கப்படாது. சிறை அல்லது சட்டபூா்வ காவலில் இருந்து தப்பிக்கும்போது ஏற்படும் மரணங்கள் மற்றும் பேரிடா்கள் அல்லது இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் மரணங்கள் ஆகியவை இத்திட்டத்தின் கீழ் வராது.

ஒவ்வொரு வழக்கிலும், சிறைக் கண்காணிப்பாளா் மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கை, உடற்கூறாய்வு அறிக்கை, இறப்புக்கான காரணம், கைதியின் நோய்ப் பாதிப்பு விவரங்கள் மற்றும் இறப்பதற்கு முன் அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் ஆகியவற்றை தில்லி சிறைத் துறை தலைமை இயக்குநரிடம் சமா்ப்பிக்க வேண்டும்.

இவ்வழக்குகள் சிறைத் துறை தலைமை இயக்குநரின் தலைமையிலான குழுவால் ஆய்வு செய்யப்படும். இக்குழுவில் சிறைத் துறை உதவி ஆய்வாளா், மருத்துவ அதிகாரி, கணக்குத் துறை துணை கட்டுப்பாட்டாளா் மற்றும் சட்ட அதிகாரி ஆகியோா் உறுப்பினா்களாக இருப்பாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.