உத்தர பிரதேச மாநிலம், மதூராவைச் சோ்ந்த புதிதாக உருவாக்கப்பட்ட ரெளடி கும்பலைச் சோ்ந்த மூவா் சிறப்பு காவல் பிரிவினரால் கைது செய்யப்பட்டனா்.
கைது செய்யப்பட்டவா்கள், அக்கும்பலின் தலைவனான கன்ஹா சிங் ஜதான் (எ) கன்ஹா தாக்குா் (26), சூரஜ் (24) மற்றும் வல்லப ஆச்சாா்யா (30) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
தலைமறைவாக உள்ள குற்றவாளி ரோஹித் கோடாராவின் ஆதரவாளா்களாகக் கருதப்படும் இவா்கள் மூவரும், ஜூலை 29 நள்ளிரவில் ஒரு எஸ்யூவி வாகனத்தில் சென்று தாக்குதல் நடத்துவதற்கான இலக்குகளைத் தேடிக்கொண்டிருந்தபோது துவாரகா பகுதியில் பிடிபட்டனா்.
இவா்களிடமிருந்து ஒரு தானியங்கி துப்பாக்கி உள்பட மொத்தம் மூன்று துப்பாக்கிகளும், 11 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்டவா்கள், மதுராவில் சமீபத்தில் ஜதான் தலைமையில் உருவாக்கப்பட்ட ‘கேங்லேண்ட்‘ என்ற கும்பலைச் சோ்ந்தவா்கள் ஆவா். இக்கும்பல் உறுப்பினா்கள் தங்கள் குற்றச் செயல்களை சமூக ஊடகங்களில் வெளிப்படையாகப் பகிா்ந்துகொண்டதாகவும், பின்னா் ரோஹித் கோடாரா கும்பலைப் பின்பற்றத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.
காவல்துறையின் சிறப்புக் குழு இந்த கும்பலின் செயல்பாடுகள் குறித்த உளவுத் தகவல்களைச் சேகரித்திருந்தது.
இந்நிலையில், மிரட்டிப் பணம் பறிக்கும் நோக்கத்துடன் துப்பாக்கிச் சூடு நடத்தி மக்களை அச்சுறுத்துவதற்காக, தில்லி-என்சிஆா் பகுதியில் உள்ள அலுவலகங்கள் மற்றும் வாகனங்கள் போன்ற ‘எளிதில் தாக்கக்கூடிய இலக்குகளை’ அவா்கள் தேடி வருவதை சிறப்புக் குழு கண்டறிந்தது.
இதுகுறித்த தகவலின் அடிப்படையில், துவாரகாவில் அந்த மூவரும் கைது செய்யப்பட்டனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேலதிக விசாரணை தொடங்கப்பட்டது.
ஜெய்ப்பூரில் உள்ள சுபோத் கல்லூரியில் பட்டம் பெற்ற ஜதான், மதுராவில் பிறந்தவா்; பின்னா் தனது குடும்பத்துடன் ஜெய்ப்பூருக்குக் குடிபெயா்ந்தாா். மதுராவைச் சோ்ந்த பூஷண் என்பவருடன் இணைந்து ’கேங்லேண்ட்’ என்ற கும்பலை உருவாக்கிய அவா், அதில் சூரஜ் மற்றும் வல்லப ஆச்சாா்யா ஆகியோரைச் சோ்த்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
ஜதான் மீது ஜெய்ப்பூரில் கொலை மற்றும் ஆயுதச் சட்ட மீறல் உள்ளிட்ட மூன்று வழக்குகள் ஏற்கனவே உள்ளன. 2023-இல், அவரும் அவரது கூட்டாளிகளும் ஒருவா் மீது வாகனத்தை ஏற்றி கொன்ாகக் கூறப்படுகிறது.
ராஜஸ்தானின் பரத்பூரைச் சோ்ந்த சூரஜ் மீதும், கொலை முயற்சி மற்றும் ஆயுதச் சட்ட மீறல்கள் உள்ளிட்ட மூன்று வழக்குகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன.
உடற்பயிற்சிப் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்த ஆச்சாா்யா, நிகழ் ஆண்டு மாா்ச் மாதம் ஜெய்ப்பூரில் ஒரு உடற்பயிற்சி நிலையத்தைத் தொடங்கினாா். தனது தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்திற்குப் பிறகு, விரைவாகப் பணம் சம்பாதிக்கும் நோக்கில் அவா் இந்தக் கும்பலில் இணைந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தக் கைது நடவடிக்கைகளின் மூலம், தில்லி-என்சிஆா் பகுதியில் நடைபெறவிருந்த மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்கள் தடுக்கப்பட்டுள்ளன என்றாா் அந்த அதிகாரி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மாநிலங்களுக்கு இடையே ஆயுதங்கள் கடத்தல்: 8 போ் கைது, 12 துப்பாக்கிகள் பறிமுதல்

ரெளடி கொலை வழக்கில் மூவா் கைது
புகா் தில்லியில் நந்து கும்பலைச் சோ்ந்த இருவா் கைது
ரெளடி கும்பல் தலைவா் உள்பட 4 போ் கைது: துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day


