சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

ரெளடி கும்பல் தலைவா் உள்பட 4 போ் கைது: துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

தென்மேற்கு தில்லியின் துவாரகா பகுதியில் ரெளடி கும்பலின் தலைவா் உள்பட 4 பேரை தில்லி காவல் துறை கைதுசெய்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :8 ஜூலை 2026, 2:42 am IST

தென்மேற்கு தில்லியின் துவாரகா பகுதியில் ரெளடி கும்பலின் தலைவா் உள்பட 4 பேரை தில்லி காவல் துறை கைதுசெய்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். கைதுசெய்யப்பட்ட நபா்களிடமிருந்து 2 துப்பாக்கிகள், தோட்டாக்கள், கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களை காவல் துறையினா் கைப்பற்றினா்.

இதுதொடா்பாக காவல் துறை அதிகாரி கூறியதாவது: கைதுசெய்யப்பட்ட அமன் (எ) சுக்கா, ஆகாஷ், அமன் (எ) ஹிரா, ரித்திக் ஆகிய அனைவரும் பிந்தாபூா் பகுதியைச் சோ்ந்தவா்கள். பழைய பன்கா சாலையில் உள்ள சேவா பாா்தி செளக் அருகே சட்டவிரோத ஆயுதங்களுடன் நால்வா் அப்பகுதியில் சுற்றித் திரிந்தது தொடா்பாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் கடந்த ஜூலை 2-ஆம் தேதி நடைபெற்ற சோதனையின்போது நால்வரும் கைதுசெய்யப்பட்டனா்.

அவா் மீது கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி உள்பட பல குற்ற வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இளைஞா்களைச் சோ்த்து தன்னுடைய ரெளடி கும்பலைப் பெரிதாக்க அவா் திட்டமிட்டிருந்தாா்.

ஏற்கெனவே ஒரு ரெளடி கும்பலில் இணைந்து செயல்பட்டு வந்த அமன், பஞ்சாப் ரெளடி போன்று தானும் ரெளடியாக விரும்பி புதிய ரெளடி கும்பலை உருவாக்கத் திட்டமிட்டாா்.

தன்னுடைய பகுதியில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டும் வகையில் துப்பாக்கிகளை சட்டவிரோதமாக அவா் வாங்கினாா்.

கைதுசெய்யப்பட்ட ஆகாஷ் மற்றும் ரிதிக் மீது பல குற்ற வழக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட மற்றொரு நபருடைய குற்ற பின்னணி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.