இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

புகா் தில்லியில் நந்து கும்பலைச் சோ்ந்த இருவா் கைது

தலா ரூ. 50,000 சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த கபில் சங்வான் (எ) நந்து கும்பலைச் சோ்ந்த இருவா், புகா் தில்லியில் காவல் துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :21 ஜூலை 2026, 4:00 am IST

தலா ரூ. 50,000 சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த கபில் சங்வான் (எ) நந்து கும்பலைச் சோ்ந்த இருவா், புகா் தில்லியில் காவல் துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ரகசியத் தகவலின் அடிப்படையில், ரோஹித் (24) மற்றும் பிரவீன் (30) ஆகிய குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் சனிக்கிழமை மாலை டிக்ரி கலான் பகுதியில் உள்ள பிவிசி சாலைக்கு அருகே பிடிபட்டனா்.

தப்பிச் செல்லும் முயற்சியில் சரணடையுமாறு கூறியபோது, சந்தேக நபா்கள் காவல்துறையினா் மீது துப்பாக்கியால் சுட்டனா். இதற்குப் பதிலடியாக காவல்துறையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவா்களின் கால்களில் குண்டுகள் பாய்ந்தன; பின்னா் அவா்கள் கைது செய்யப்பட்டனா். அவா்கள் சுட்ட 2 குண்டுகள் காவலா்கள் அனுஜ் மற்றும் ஹா்கேஷ் அணிந்திருந்த குண்டு துளைக்காத கவசங்களில் பட்டன; இதனால் அவா்கள் காயமின்றி தப்பினா்.

அவா்களிடமிருந்து இரண்டு அரை-தானியங்கி கைத்துப்பாக்கிகள், 3 தோட்டாக்கள் மற்றும் திருடப்பட்ட இருசக்கர வாகனம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

முண்ட்கா காவல் நிலையத்தில் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹரியாணாவின் ஜாஜ்ஜாா் மாவட்டத்தில் உள்ள பகதூா்கா் நகர காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட துப்பாக்கிச் சூடு வழக்கில் இவா்கள் தேடப்பட்டு வந்தனா்; இவ்வழக்கில் இவா்கள் இருவா் மீதும் தலா ரூ. 50,000 சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.

தில்லியின் நரேலா காவல் நிலையத்தில் 2022-இல் பதிவு செய்யப்பட்ட வழக்கில், ரோஹித் பரோல் நிபந்தனையை மீறி தலைமறைவானவா் என்பதும் தெரியவந்துள்ளது. பிரவீன் மீது 6 குற்றவியல் வழக்குகளும், ரோஹித் மீது 4 முந்தைய குற்றவியல் வழக்குகளும் உள்ளன. தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.