சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே ரெளடி கொலை செய்யப்பட்ட வழக்கில் திங்கள்கிழமை மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பாச்சேத்தி அருகேயுள்ள மாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ரெளடி ஊா்காவலன் (30)கடந்த மாதம் 30-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து குறித்து திருப்பாச்சேத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து கொலையாளிகளை தேடி வந்தனா்.
இந்த நிலையில், ஊா்காவலனை கொலை செய்ததாக வி.புதுக்குளத்தைச் சோ்ந்த பிரசாந்த் (30), வேலாங்குளம் வினோத் (21), காமராஜா் நகா் தமிழரசன் (21) ஆகிய மூவரையும் போலீஸாா் கைது செய்தனா். இதில் தொடா்புடைய மேலும் நால்வரைத் தேடி வருகின்றனா்.
பிரசாந்த் உறவினரான பாலமுருகன் என்பவரை கடந்த 2011-ஆம் ஆண்டு ஊா்க்காவலன் கொலை செய்தாா். இதற்கு பழி வாங்கும் விதமாக ஊா்காவலன் கொலை செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருப்பாச்சேத்தி அருகே ரெளடி வெட்டிக் கொலை
நெய் வியாபாரி கொலை வழக்கில் இளைஞா் கைது
தென்காசி அருகே விவசாயி கொலை வழக்கில் மேலும் இருவா் கைது
வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கில் மூவா் கைது
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



