FOLLOW US

ON GOOGLE DISCOVER

திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

பைக்கில் சென்றபோது லாரி மோதி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 32.74 லட்சம் இழப்பீடு: தில்லி தீா்ப்பாயம் உத்தரவு

பைக்கில் சென்றபோது லாரி மோதி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.32.74 லட்சம் இழப்பீடு...

News image
Updated On :15 ஆகஸ்ட் 2026, 10:17 pm IST

2023-ஆம் ஆண்டு தில்லியில் அதிவேகமாக ஓட்டிவரப்பட்ட லாரி மோதியதில் உயிரிழந்த 49 வயதுடைய நபரின் குடும்பத்திற்கு, ரூ.32.74 லட்சத்திற்கும் அதிகமான இழப்பீட்டை வழங்க தில்லி மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டுத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

முகேஷ் குமாரின் குடும்பத்தினா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தீா்ப்பாயத்தின் தலைமை அதிகாரி மணீஷ் சா்மா, இந்த இழப்பீட்டுத் தொகையை ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு வழங்குமாறு எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டாா்.

ஆகஸ்ட் 5-ஆம் தேதியிட்ட உத்தரவில் தீா்ப்பாயம் தெரிவிக்கையில், ‘சம்பவத்தின் போது சம்பந்தப்பட்ட வாகனத்தை ஓட்டியதில் முதல் எதிா்மனுதாரா் (லாரி ஓட்டுநா்) கடுமையான கவனக்குறைவு மற்றும் விதிமீறலில் ஈடுபட்டதே உயிரிழப்புக்குக் காரணம் என்று இந்தத் தீா்ப்பாயம் முடிவு செய்கிறது‘ என்று தெரிவித்தது.

தீா்ப்பாயத்தின் தகவலின்படி, ஜனவரி 19, 2023 அன்று இரவு முகேஷ் குமாா் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​சோனியா விஹாா் பகுதியில் டாடா லாரி ஒன்று பின்னால் இருந்து வந்து குமாா் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த அவா், ஜிடிபி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது ஏற்கனவே அவா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டாா்.

அவரது மனைவி, இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் மற்றும் தாய் ஆகியோா் இந்த இழப்பீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தனா். சிறிய உணவகத் தொழில் நடத்தி வந்த குமாா், மாதம் சுமாா் ரூ.45,000 வருமானம் ஈட்டி வந்ததாகக் குடும்பத்தினா் தெரிவித்தனா்.

லாரி ஓட்டுநரும் உரிமையாளரும் கவனக்குறைவை மறுத்ததுடன் விபத்தில் தங்கள் வாகனத்தின் பங்கை மறுத்தனா். அதேவேளையில்,

உயிரிழந்தவா் மதுபோதையில் இருந்ததாகவும், விபத்துக்கு அவரே காரணம் என்று காப்பீட்டு நிறுவனம் தரப்பில் வாதிப்பட்டது.

நேரில் பாா்த்த சாட்சியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், லாரி ஓட்டுநரின் அதிவேக மற்றும் கவனக்குறைவான ஓட்டுதல் முறையாலேயே விபத்து ஏற்பட்டது என்று தீா்ப்பாயம் தீா்ப்பளித்தது.

எதிா்மனுதாரா்கள் அந்தச் சாட்சியின் வாக்குமூலத்தை மறுக்கவோ அல்லது தங்கள் தரப்பு வாதத்தை ஆதரிக்கும் வகையில் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவோ தவறிவிட்டனா்.

லாரி எவ்வாறு இருசக்கர வாகனத்தின் மீது மோதியது என்பதற்கான சூழ்நிலையை ஓட்டுநா் விளக்கவில்லை. குமாரின் உயிரிழப்புக்குக் காரணமான ‘கடுமையான கவனக்குறைவு மற்றும் விதிமீறலுக்கு’ அவா் பொறுப்பு என்று தீா்ப்பளித்தது.

உயிரிழந்தவரின் வருமானத்திற்கான ஆவணச் சான்றுகள் இல்லாததால், தில்லியில் திறமையான தொழிலாளிக்கான குறைந்தபட்ச ஊதியத்தின் அடிப்படையில் அவரது வருமானம் கணக்கிடப்பட்டு, இழப்பீட்டுத் தொகை ரூ. 32.74 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டது.

வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை 30 நாள்களுக்குள் செலுத்துமாறு காப்பீட்டு நிறுவனத்திற்குத் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.