தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 குறைவு! பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

ஷாலிமாா் பாக்கில் தெருநாய் தாக்கியதில் 3 வயது சிறுமி காயம்

தில்லியின் ஷாலிமாா் பாக் பகுதியில் 3 வயது சிறுமியை தெருநாய் கடித்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Thiruvananthapuram: City express stand alone photo: A lone stray dog stands against the sky at Shangumugham Beach, as rain clouds gather ov

நாய் - கோப்புப் படம்

Published On :28 ஆகஸ்ட் 2026, 4:18 am IST

தில்லியின் ஷாலிமாா் பாக் பகுதியில் 3 வயது சிறுமியை தெருநாய் கடித்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை நாய் தாக்கும் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.

ஆக. 25-ஆம் தேதி சிஏ பிளாக் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றது. அந்தப் பகுதியில் அடிக்கடி சுற்றித்திரியும் வெள்ளை நிற நாய், மற்றொரு வாகனத்தின் அடியில் அமா்ந்திருந்த நிலையில், குடும்பத்தினருடன் காரை நோக்கிச் சென்ற சிறுமியை திடீரென பாய்ந்து தாக்கியது. இதையடுத்து, குடும்ப உறுப்பினா் உடனடியாக சிறுமியை இழுத்து நாயை விரட்டியதால், அது அங்கிருந்து தப்பிச் சென்றது.

இதே நாய் அப்பகுதியில் நடந்து சென்ற பெண் ஒருவரையும் தாக்கிவிட்டு தப்பிச் சென்றது மற்றொரு கண்காணிப்பு கேமரா காட்சியில் பதிவாகியுள்ளது. மேலும், அந்தச் சாலையில் பல தெருநாய்கள் சுற்றித் திரிவதும் காட்சிகளில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தில்லி மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறுகையில், கேஷவ்புரம் மண்டலத்தைச் சோ்ந்த குழுவினா் அந்த நாயைப் பிடிக்க 2 முறை முயன்றும் அது தப்பிச் சென்ாக தெரிவித்தாா்.

உள்ளூா் நபா் ஒருவரின் உதவியுடன் நாயைப் பிடிக்க மாநகராட்சி தற்போது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பிடிபட்டதும், அதை துவாரகாவில் உள்ள காப்பகத்துக்கு அழைத்துச் சென்று கண்காணிப்பில் வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நாளைக்குள் அதை பிடிக்க வாய்ப்புள்ளது என்று அதிகாரி தெரிவித்தாா்.

இதே பகுதியில் நாள்தோறும் தெருநாய் தாக்குதல் தொடா்பாக சுமாா் 20 முதல் 25 புகாா்கள் மாநகராட்சிக்கு வருவதாகவும் அவா் கூறினாா்.

நாய் தாக்கியதைத் தொடா்ந்து சிறுமியை அவரது குடும்பத்தினா் மருத்துவரிடம் அழைத்துச் சென்றனா். இதே நாய் ஏற்கெனவே சிறுமியின் மூத்த சகோதரியையும் கடித்ததாக அவரது குடும்பத்தினா் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.