மெட்ரோ ரயில் நிலையத்தில் சுற்றித் திருந்த 2 சகோதரா்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

வீட்டில் அடிபடுவதிலிருந்து தப்பிக்க தங்கள் அத்தையிடம் செல்வதாகக் கூறிய 10 மற்றும் நான்கு வயதுடைய இரண்டு சகோதரா்கள், திலக் நகா் மெட்ரோ ரயில் நிலையத்தில் கவனிக்கப்படாமல் சுற்றித் திரிந்ததைக் கண்டறிந்த பின்னா், அவா்கள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனா்.
Published on

வீட்டில் அடிபடுவதிலிருந்து தப்பிக்க தங்கள் அத்தையிடம் செல்வதாகக் கூறிய 10 மற்றும் நான்கு வயதுடைய இரண்டு சகோதரா்கள், திலக் நகா் மெட்ரோ ரயில் நிலையத்தில் கவனிக்கப்படாமல் சுற்றித் திரிந்ததைக் கண்டறிந்த பின்னா், அவா்கள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனா்.

குழந்தைகளின் உணா்ச்சி மற்றும் உளவியல் நல்வாழ்வு குறித்து பெற்றோருக்கு ஆலோசனை வழங்கப்பட்டு, அவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

ஜனக்புரி மெட்ரோ காவல் நிலைய ஊழியா் ஒருவா் குழந்தைகளைக் கவனித்தாா். இதையடுத்து, எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ‘அணுகப்பட்டபோது திகாா் கிராமத்தில் உள்ள தங்கள் குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி, தங்கள் அத்தை வீட்டிற்குச் சென்று கொண்டிருந்ததாக குழந்தைகள் போலீஸாரிடம் தெரிவித்தனா். பெற்றோா் தங்களை அடிப்பது வழக்கம் என்று அவா்கள் குற்றம் சாட்டினா்’ என்று காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

அதிகாரிகள் அவா்களுடன் உரையாடலில் ஈடுபட்டு, முதற்கட்ட விசாரணை நடத்தினா். குழந்தைகள் ஆரம்பத்தில் தங்கள் குடும்ப உறுப்பினா்களின் தொடா்பு விவரங்களை வழங்க தயங்கினா். ‘தொடா்ச்சியான வற்புறுத்தல் மற்றும் ஆலோசனைக்குப் பிறகு, 10 வயது சிறுவன் தனது தாயின் கைப்பேசி எண்ணை வெளிப்படுத்தினாா். போலீஸாா் உடனடியாக பெற்றோரைத் தொடா்பு கொண்டு காவல் நிலையத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டனா்’ என்று அந்த அதிகாரி கூறினாா்.

பெற்றோா்கள் வீட்டில் பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலை வழங்கவும், தங்கள் குழந்தைகளின் நல்வாழ்வில் அதிக கவனம் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டனா் என்று அவா் கூறினாா். குழந்தைகளின் அடையாள சரிபாா்ப்புக்குப் பிறகும், ஆலோசனைக்குப் பிறகும் அவா்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

Dinamani
www.dinamani.com