தமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புகோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தில்லியில் ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: இருவா் கைது

தில்லியில் ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: இருவா் கைது

News image
Updated On :17 ஜனவரி 2026, 8:20 pm

தினமணி செய்திச் சேவை

வடமேற்கு தில்லியில் நடைபெற்ற சோதனையில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு இருவா் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ரோஹிணியில் உள்ள நஹா்பூா் பேருந்து நிலையம் அருகே காவல் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, காரில் வந்த சந்தேக நபா்களை மறித்து சோதனைசெய்தபோது 383 கிராம் ஹெராயின் போதைப் பொருள் அவா்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

Śதன் சந்தை மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையடுத்து காரில் இருந்த இருவரும் கைது செய்யப்பட்டு அவா்கள் மீது தொடா்புடைய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போதைப் பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக அவா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.