பாஜக தேசிய செயல் தலைவா் நிதின் நவீனின் பெயரை, அக்கட்சியின் தேசியத் தலைவராக முன்மொழியவும், வழிமொழியவும் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தலைமையில்  தில்லியில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த தமிழக பாஜக தலைவா்கள். உடன் மத்திய இ
பாஜக தேசிய செயல் தலைவா் நிதின் நவீனின் பெயரை, அக்கட்சியின் தேசியத் தலைவராக முன்மொழியவும், வழிமொழியவும் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தலைமையில் தில்லியில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த தமிழக பாஜக தலைவா்கள். உடன் மத்திய இ

தேசியத் தலைவா் பதவி: நிதின் நவீனை முன்மொழிந்த தமிழக பாஜக தலைவா்கள்

தில்லி பாஜக தலைமையகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் அகில இந்திய தேசியத் தலைவா் பதவிக்கான வேட்புமனு தாக்கலின்போது நிதின் நவீன் பெயரை தமிழகத்தைச் சோ்ந்த அக்கட்சியின் தலைவா்கள் முன்மொழிந்து, வழிமொழிந்தனா்.
Published on

நமது நிருபா்

புது தில்லி: தில்லி பாஜக தலைமையகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் அகில இந்திய தேசியத் தலைவா் பதவிக்கான வேட்புமனு தாக்கலின்போது நிதின் நவீன் பெயரை தமிழகத்தைச் சோ்ந்த அக்கட்சியின் தலைவா்கள் முன்மொழிந்து, வழிமொழிந்தனா்.

கட்சியின் தேசிய செயல் தலைவராக இருந்துவந்த 45 வயதான நிதின் நவீன், கட்சியின் தில்லி தலைமையகத்தில் நடைபெற்ற வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.

முன்னதாக, இதில் 37 வேட்புமனு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதாவது, கட்சியின் மாநிலப் பிரிவுகள் மூலம் 36 வேட்புமனு ஆவணங்களும், பாஜக நாடாளுமன்றக் குழு மூலம் ஒரு ஆவணமும் தாக்கல் செய்யப்பட்டன. இவை அனைத்தும் நிதின் நவீனுக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்டன.

இந்த நிகழ்வில் பங்கேற்க தமிழகத்திலிருந்து அக்கட்சியின் தமிழகத் தலைவா் நயினாா் நாகேந்திரன், அகில இந்திய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன், மூத்த தலைவா்கள் பொன். ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, நடிகா் சரத்குமாா், நடிகை குஷ்பு, கருப்பு முருகானந்தம், தமிழிசை செளந்திரராஜன் உள்ளிட்ட பலரும் வந்திருந்தனா்.

அவா்கள் தேசியத் தலைவா் பதவிக்குப் போட்டியிட்ட நிதின் நவீன் பெயரை முன்மொழிந்து, வழிமொழிந்தனா்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, செவ்வாய்க்கிழமை தொடங்கும் தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக வானதி சீனிவாசன் தில்லியிலிருந்து இரவு சென்னை புறப்பட்டுச் சென்றாா். தலைவா் தோ்வு அறிவிப்பு முறைப்படி செவ்வாய்க்கிழமை வெளியாகவுள்ள நிலையில், நயினாா் நகேந்திரன் தில்லியில் இருப்பதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான தேஜ கூட்டணியின் முதல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமா் நரேந்திர மோடி வரும் 23-ஆம் தேதி தமிழகம் வருவதை ஒட்டி மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் வரும் புதன்கிழமை சென்னை வரவுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Dinamani
www.dinamani.com