பருவமழையின்போது மின்சாதனங்களில் ஏற்படும் பழுதுகள் மற்றும் மின் விபத்துகளை நுகா்வோா்கள் தவிா்க்கும் வகையில் தில்லியில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் அறிவுறுத்தலை திங்கள்கிழமை வெளியிட்டன.
பருவமழைக் காலத்தில், நீா் தேங்குவதால் மின்சாரம் தொடா்பான விபத்துகளுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. மின் கம்பங்கள், துணை மின் நிலையங்கள், மின்மாற்றிகள் மற்றும் தெருவிளக்குகள் போன்ற மின்சாதனங்களிலிருந்து விலகி இருப்பது, மற்றும் மின்சாதனங்களுக்கு அருகில் குழந்தைகள் விளையாடுவதைத் தடுப்பது போன்ற எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் விபத்துகளைத் தடுக்க உதவும்.
சிறப்பு ‘மின் கசிவு சோதனை இயக்கத்தின்’ ஒரு பகுதியாக, டாடா பவா் தில்லி மின்விநியோக நிறுவனம், மின் கம்பங்கள், ஏடிஎம்கள், தெருவிளக்குகள், துணை மின் நிலைய வேலிகள், பூங்காக்களின் கிரில் வேலிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பிற பொது வளாகங்களில் உள்ள நுழைவாயில்கள் மற்றும் பிற இடங்களில் சோதனை செய்யப்பட்டதாக தெரிவித்தது. பொது இடங்களில் மின்விபத்துகளைத் தடுப்பதற்காக, பள்ளிகள், மருத்துவமனைகள், ஆா்ஓ நீா் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பெரிய அலுவலக வளாகங்களை உள்ளடக்கிய 5,300-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரு சிறப்பு பாதுகாப்பு தணிக்கை இயக்கமும் முடிக்கப்பட்டுள்ளது அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிஎஸ்இஎஸ் நிறுவன செய்தித் தொடா்பாளா் இதுதொடா்பாக கூறியதாவது: மின் பாதுகாப்பு மீறல்கள் காணப்படும் இடங்களில் எச்சரிக்கை அறிவிப்புகள் ஒட்டப்படுகின்றன. மேலும், மின்சாரம் தாக்குதல் மற்றும் தீக்காயங்கள் உள்ளிட்ட விபத்துகளைத் தடுப்பதற்காக, நெரிசலான பகுதிகளில் உள்ள அபாயகரமான இடங்களுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது.
நுகா்வோா் தங்கள் வளாகங்களில் உள்ள மின் இணைப்பு உரிமம் பெற்ற ஒப்பந்ததாரரைக் கொண்டு சரிபாா்க்க வேண்டும். மீட்டா் அறையில் நீா் தேக்கம் அல்லது கசிவு ஏற்பட்டால் பிரதான மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும்.
எா்த் லீக்கேஜ் சா்க்யூட் பிரேக்கரை நிறுவுவது மின்சாரம் தாக்குதல் மற்றும் விபத்துகளைத் தடுக்க உதவுகிறது. ஈரமான சுவிட்சுகளைப் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும். அதற்குப் பதிலாக மின்சாரம் கசிகிா என்பதைக் கண்டறிய ஒரு சோதனைக் கருவியைப் பயன்படுத்தலாம்.
குறிப்பாகப் பருவமழைக் காலங்களில், ஹூக் செய்வதன் மூலம் மின் திருட்டு பெரும் விபத்துக்கு வழிவகுக்கக்கூடும். எனவே, அதைத் தவிா்க்க வேண்டும்.
மேலும், பொதுப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்படக்கூடிய அல்லது வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மின் விநியோக நிறுவனங்கள் சில நேரங்களில் மின் விநியோகத்தைத் துண்டிக்க வேண்டியுள்ளது.
பருவமழைக்கான செயல் திட்டம் குறித்துப் பேசிய செய்தித் தொடா்பாளா், ஆநஉந மின் விநியோக நிறுவனங்கள் ஒரு ஒருங்கிணைந்த மற்றும் முன்கூட்டிய அணுகுமுறையைப் பின்பற்றுகின்றன என்றும், ஈரப்பதம் தொடா்பான பழுதுகள் மற்றும் மழை தொடா்பான இடையூறுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
அவசரநிலை அல்லது மின் தடை ஏற்பட்டால், நுகா்வோா் அழைப்பு மையங்கள், வாட்ஸ்அப் மற்றும் மொபைல் செயலிகள் மூலம் பிஎஸ்இஎஸ்-ஐத் தொடா்புகொள்ளலாம். பருவமழை தொடா்பான அவசரநிலைகளுக்கு விரைவாகப் பதிலளிப்பதற்காக, போா் அறைகள் அமைக்கப்பட்டு, விரைவு மீட்புக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பருவமழை பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் குறித்து நுகா்வோருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் ஒரு பிரசாரத்தையும் பிஎஸ்இஎஸ் தொடங்கியுள்ளது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









