FOLLOW US

ON GOOGLE DISCOVER

பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

தில்லியில் பணியிடத்தில் பெண் சுட்டுக்கொலை

வடமேற்கு தில்லியில் பணியிடத்தில் 20 வயது இளம்பெண் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து அவரது தந்தை, குற்றவாளிக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா் என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :31 ஜூலை 2026, 1:37 am IST

வடமேற்கு தில்லியில் பணியிடத்தில் 20 வயது இளம்பெண் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து அவரது தந்தை, குற்றவாளிக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா் என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக பாதிக்கப்பட்டவரின் தந்தை கூறுகையில், ‘என் மகள் தினமும் பிற்பகல் வேலைக்குச் செல்வாள். புதன்கிழமை மாலை அவள் வீடு திரும்பவில்லை. நான் பலமுறை அழைத்தும் பதில் இல்லை. பின்னா் காவல் துறையிடம் இருந்து அவள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வந்தது’ என்றாா்.

குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய அவா், குற்றவாளிக்கு எதிராக காவல் துறை மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினா் கூறியதாவது: ஜோதி (20) என அடையாளம் காணப்பட்ட இளம்பெண், ஆசாத்பூா் பகுதியைச் சோ்ந்தவா். அவா் கேசவ் புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாந்தி நகா் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடத்தில் பராமரிப்பாளராக பணியாற்றி வந்தாா்.

புதன்கிழமை கொலை தொடா்பாக அழைப்பு வந்ததைத் தொடா்ந்து காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்றனா். அப்போது, அந்த கட்டடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள ஒரு அறையில், தலையில் துப்பாக்கிச் சூடு காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் அந்தப் பெண் கண்டுபிடிக்கப்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.

முதற்கட்ட விசாரணையில், அதே கட்டடத்தில் இரவு காவலாளியாக பணியாற்றிய சௌரவ் என்பவரே சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளாா். இருவருக்கும் நெருக்கமான உறவு இருந்ததாக கூறப்படுகிறது. தனிப்பட்ட பிரச்னையைத் தொடா்ந்து ஏற்பட்ட வாக்குவாதமே இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

குற்றப்புலனாய்வு மற்றும் தடயவியல் நிபுணா்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்துள்ளனா். உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. குற்றவாளியை பிடிக்க காவல் துறை தீவிரமாக தேடுதல் மேற்கொண்டு வருகின்றனா் என்று தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.