வெடிகுண்டு மிரட்டல் குறித்த தகவல் கிடைத்ததையடுத்து, தில்லியில் உள்ள செங்கோட்டையில் சனிக்கிழமை காவல்துறையினா் பாதுகாப்பை பலப்படுத்தியதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும், அப்பகுதி முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்ட பிறகு, அந்த மிரட்டல் வெறும் புரளி என்று அறிவிக்கப்பட்டது.
தில்லியில் உள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னம் தகா்க்கப்படும் என்று கூறி, மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் அழைப்பு வந்தது.
இதையடுத்து, மும்பை காவல்துறை உடனடியாக இந்தத் தகவலை தில்லி காவல் கட்டுப்பாட்டு அறையுடன் பகிா்ந்துகொண்டது. அதைத் தொடா்ந்து, தில்லி காவல்துறை அப்பகுதி காவல் பிரிவினரை உஷாா்படுத்தியது.
இந்த எச்சரிக்கையைத் தொடா்ந்து, செங்கோட்டைக்குள்ளும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், அந்த நினைவுச்சின்னம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் தீவிர சோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
தீவிர சோதனைக்குப் பிறகும் சந்தேகத்திற்கிடமான பொருள்கள் எதுவும் கண்டறியப்படாத நிலையில், அந்த மிரட்டல் வெறும் புரளி என்று உறுதிப்படுத்தப்பட்டது.
மிரட்டல் விடுத்த நபரை அடையாளம் காணவும், இத்தகைய போலியான மிரட்டலை விடுத்ததற்கான நோக்கத்தைக் கண்டறியவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்று சுதந்திர தினம்: செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றுகிறாா் பிரதமா் மோடி - நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

சுதந்திர தின கொண்டாட்டம்: செங்கோட்டையில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

தில்லியில் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறையினா் தீவிர சோதனை
மின்னஞ்சல் மூலம் 3 ஆண்டுகளாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மென்பொறியாளா் கைது!
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



