பஞ்சாபில் உள்ள ஐந்து முக்கிய கோயில்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகளின் கூற்றுப்படி,
ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையின் ஆண்டு நிறைவுக்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. ஜூன் 1984-ல் பொற்கோயிலில் இருந்து தீவிரவாதிகளை வெளியேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சர்ச்சைக்குரிய ராணுவ நடவடிக்கை குறித்த ஆத்திரமூட்டும் குறிப்புகள் இடம் பெற்றிருந்தன.
ஜலந்தரில் உள்ள தேவி தலாப் கோயிலில் போலீஸார் சோதனை நடத்தினர். ஆனால், சந்தேகத்திற்குரிய பொருள்கள், வெடிபொருள்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.
பீதியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் விடுக்கப்பட்ட போலி மிரட்டலாகவே இருந்தாலும், எவ்வித இடரையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் கூறினர்.
இந்த மின்னஞ்சல் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பது குறித்து இணையக் குற்றப் புலனாய்வுக் குழுக்கள் விசாரணை நடத்தி வருவதாகவும், இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த சில வாரங்களாக பஞ்சாப் மற்றும் ஹரியாணாவின் பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது, பின்னர் அது போலி மிரட்டல்கள் எனத் தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாகவே, புதிய மிரட்டல் இன்று வந்துள்ளது.
ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையின் ஆண்டு நிறைவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள சூழலிலேயே, வியாழக்கிழமையன்று இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
Summary
A bomb threat email to five prominent temples in Punjab on Thursday triggered a security alert.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேலம் ஆட்சியா் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

சுவாமி சிலைகளை கோயில்களுக்கு அனுப்பி வைக்கக் கோரிய வழக்கு: இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு

பஞ்சாபில் மர்ம நபர்களால் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொலை

தில்லியில் 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
விடியோக்கள்

முக்கிய Hard Disk-கள் திருட்டு! கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சர் நிர்மல் குமார்

இன்னொரு சின்னத்தில் போட்டியிடக் கூடாது! துரை வைகோ உறுதி! | MDMK | DMK

”என்ன முயற்சிகள் நடந்திருக்கிறது? தவெகவிடம் கேள்வி கேட்க வேண்டும்!”: MLA செந்தில் பாலாஜி




