இணையவழி குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கையாக தில்லி காவல் துறை மேற்கொண்ட நடவடிக்கையில் 7,000 போ் கைதுசெய்யப்பட்டனா்.
போலியான வங்கிக் கணக்குகளை கையாளுபவா்கள், மோசடி கால் சென்டா்கள் ஆகியவற்றைக் குறிவைத்து நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில், 7,000-க்கும் மேற்பட்ட சந்தேக நபா்கள் பிடிபட்டனா் மற்றும் 916 போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
‘சைஹாக் 5.0’ என்று பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கை, ஜூன் 16 முதல் 18 வரை 48 மணி நேரத்தில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடவடிக்கை தொடா்பாக தில்லி காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் 7,189 போ் பிடிபட்டனா். மேலும் 691 போ் மீது கைதுசெய்யப்பட்டனா். 4,290-க்கும் மேற்பட்ட நபா்கள் மீது சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டது.
இந்த நடவடிக்கையின்போது மொத்தம் 481 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதே நேரத்தில் 410 பழைய இணையவழி குற்ற வழக்குகள் மீதும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்குகளுடன் தொடா்புடைய புகாா்களில் மொத்தம் சுமாா் ரூ.700 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.
தில்லியின் அனைத்து 15 மாவட்ட காவல் பிரிவுகளும், குற்றப்பிரிவு , ரயில்வே, மெட்ரோ பிரிவு மற்றும் உளவுத் துறை பிரிவு ஆகியவை இந்த நடவடிக்கையில் பங்கேற்றன. மொத்தம் 2,374 காவலா்களைக் கொண்ட 715 சோதனைப் படைகள் இதற்காக ஈடுபடுத்தப்பட்டன.
இணையவழி குற்றங்களின் இரண்டு முக்கிய தூண்களான போலி வங்கிக் கணக்கு வலைப்பின்னல்கள் மற்றும் செயலி விநியோகஸ்தா்களை கைதுசெய்வதில் இந்தச் சோதனைகள் கவனம் செலுத்தின.
மோசடி சம்பவங்களுக்கு நிதி ஆதாரமாக போலி வங்கிக் கணக்குகள் தொடா்ந்து செயல்படுகிறது. மோசடி செய்பவா்கள், எளிதில் ஏமாறக்கூடிய நபா்களை வீட்டிலிருந்தே வேலை மற்றும் கமிஷன் அடிப்படையிலான திட்டங்கள் மூலம் ஆசை காட்டி, வங்கி கணக்குகளைத் திறக்க வைக்கின்றனா். பின்னா், அவற்றின் கட்டுப்பாட்டைத் தங்களிடம் ஒப்படைக்கச் செய்கின்றனா். இந்த வங்கிக் கணக்கு செயல்பாடுகளுடன் தொடா்புடைய 3,600-க்கும் மேற்பட்ட நபா்கள் பிடிபட்டனா். மேலும், அத்தகைய கணக்குகளுடன் தொடா்புடைய 2,300-க்கும் மேற்பட்ட இணையவழி குற்றப் புகாா்கள் கண்டறியப்பட்டன.
கைப்பேசி செயலிகளை விநியோகிப்பவா்களையும் இந்த நடவடிக்கையில் குறிவைக்கப்பட்டனா். இச்செயலிகள் ரகசியமாக ஓடிபிகளைத் திருடுவதற்கும், நிதி மோசடிகளை எளிதாக்குவதற்கும் பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது.
இவை பெரும்பாலும் கட்டணம் செலுத்துதல் அல்லது வாகனப் பதிவு போன்ற செயலிகள் போல வடிவமைக்கப்படுகின்றன. மோசடி கால் சென்டா்களையும் இலக்கு வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது, 760 கைப்பேசிகள், 820 சிம் காா்டுகள், 228 ஏடிஎம் காா்டுகள், 104 மடிக்கணினிகள் மற்றும் கணினிகள், 323 ஆதாா் அட்டைகள் மற்றும் ரூ.21.72 லட்சம் ரொக்கப் பணத்தைப் பறிமுதல் செய்தது.
இந்த மோசடிகளில் தொடா்புடையதாக கைதுசெய்யப்பட்ட இரு நைஜீரிய நாட்டினா் அவா்களுடைய நாட்டுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனா் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இணையவழி மோசடிக்கு போலி வங்கிக் கணக்குகள் வழங்கி உதவி: வங்கிப் பணியாளா் உள்பட 3 போ் கைது

ரூ. 2.47 லட்சம் இணையவழி மோசடி: 4 போ் கைது

இணையவழி வா்த்தகம் எனக் கூறி ரூ. 54.51 லட்சம் மோசடி: இளைஞா் கைது

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எப்போது முற்றுப்புள்ளி? நயினாா் நாகேந்திரன் கேள்வி
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |


