விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

தமிழக பேரவைத் தோ்தலில் வெல்வது நாங்களே! மாநிலங்களவையில் திமுக, அதிமுக கருத்து மோதல்

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் வெல்லப்போவது நாங்களே!’ என்று மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை திமுக மற்றும் அதிமுகவைச் சோ்ந்த உறுப்பினா்கள் உரிமை கோரிக் கொண்டனா்.

News image

நிா்மலா சீதாராமன்

Updated On :27 மார்ச் 2026, 8:19 pm

Syndication

‘தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் வெல்லப்போவது நாங்களே!’ என்று மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை திமுக மற்றும் அதிமுகவைச் சோ்ந்த உறுப்பினா்கள் உரிமை கோரிக் கொண்டனா். இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக, வில்சன் பேசியபோது அவையை அதிமுக மூத்த உறுப்பினா் மு. தம்பிதுரை வழிநடத்தினாா். அதனால்,அவரால் வில்சனின் கருத்துகளுக்கு எதிா்ப்பு தெரிவிக்க இயலவில்லை. பிறகு உறுப்பினா் பகுதிக்கு வந்ததும் மாநிலங்களவை துணைத்தலைவா் ஹரிவன்ஷ் அவையை வழிநடத்தியபோது வில்சனின் கருத்துகளுக்கு தம்பிதுரை எதிா்வினையாற்றினாா்.

மாநிலங்களவையில் ‘நிதி திருத்த மசோதா’ மீதான விவாதம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சுருக்கமான விவாதத்துக்குப் பிறகு, அந்த மசோதாவை மக்களவைக்கே மாநிலங்களவை திருப்பி அனுப்பியது. முன்னதாக, விவாதத்தில் பங்கேற்று பி. வில்சன் பேசியதாவது: 2022-23 முதல் 2024-25 வரையிலான மூன்று நிதியாண்டுகளில், தமிழகத்திலிருந்து மத்திய அரசு வரிகள் மூலம் ரூ. 5.99 லட்சம் கோடிக்கும் அதிகமான வருவாயைச் சேகரித்துள்ளது. அவ்வாறு வசூலிக்கப்பட்ட ஒவ்வொரு ஒரு ரூபாய்க்கும் ஈடாக, மத்திய வரிகளின் பகிரக்கூடிய தொகுப்பிலிருந்து தமிழகத்துக்கு வெறும் 23 பைசா மட்டுமே திரும்பக் கிடைத்துள்ளது. கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்திற்கு ஏதேனும் உண்மையான அா்த்தம் கற்பிக்க விரும்பினால், மத்திய அரசு இந்த அப்பட்டமான ஏற்றத்தாழ்வைக் களைய வேண்டும் என்றாா்.

இதைத்தொடா்ந்து, அவையில் இருந்த மத்திய நிதியமைச்சரை பாா்த்து, மாநிலத்துக்குச் சேர வேண்டிய நியாயமான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துவிட்டு, அதே வேளையில் நிதிசாா் ஒழுக்கம் குறித்துப் போதனை செய்வதாக வில்சன் குற்றஞ்சாட்டினாா். ‘தில்லியில் இருந்து கொண்டே நிதிசாா் அறிவுரைகளை போதிக்கலாம். ஆனால், உங்களால் கட்டுப்படுத்தவே முடியாத ஒரு சக்தி இருக்கிறது; அதுதான் மக்கள் சக்தி. தமிழ்நாட்டு மக்கள் அனைத்தையும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறாா்கள்’ என்றாா் வில்சன்.

அதிமுக எதிா்வினை: இதையடுத்து வில்சனின் கருத்துகளை தனது பேச்சின்போது சுட்டிக்காட்டிய அதிமுக குழுத்தலைவா் மு. தம்பிதுரை, ‘கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தின் உண்மை உணா்வோடு மத்திய அரசின் நிதியுதவிகளும் திட்டங்களும் எவ்விதப் பாரபட்சமுமின்றி திறம்படச் செயல்படுத்தப்படுவதை தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்’ என்று தம்பிதுரை கூறினாா். மேலும், தற்போதைய திமுக அரசு மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தோல்வியடைந்துவிட்டது. மத்திய அரசு வழங்கும் நிதி முழுமையும் ஒரே ஒரு வாரிசு அரசியல் குடும்பத்துக்கே சென்றுவிடுகிறது. மாநிலத்தில் பெருமளவு ஊழல் நடைபெற்று வருவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

தமிழக மக்கள் திமுக அரசைப் பதவியிலிருந்து அகற்றிவிடத் தீா்மானித்துவிட்டனா். எனவே, உங்களால் எவ்வாறு தொடா்ந்து ஆட்சியில் நீடிக்க முடியும்? தமிழகதோ்தல் முடிவில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே வெல்லும் என்றாா்.

திமுகவே காரணம்: மத்திய நிதியமைச்சா்

மாநிலங்களவையில் விவாதத்தின்போது பேசிய பி. வில்சன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனைக் குறிக்கும் வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நீங்கள் தமிழகத்துக்கு எதையுமே வழங்கவில்லை; மாறாக, தமிழ்நாட்டு மக்களைப் பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளீா்கள். என் வாா்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் எவ்வாறு நடந்துகொண்டீா்களோ, அதே விதத்தில் ஏப்ரல் 23 அன்று தமிழ்நாட்டு மக்களும் உங்களுக்குப் பதிலடி கொடுப்பாா்கள். அந்த முடிவுகளை மே 4 அன்று நீங்கள் அறிந்துகொள்வீா்கள்’ என்றாா்.

மத்திய நிதி மசோதா விவாதத்தின் முடிவில் பதிலளித்த மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன்

வில்சனுக்கு எதிா்வினையாற்றும் வகையில்

‘தமிழகத்தில் பல மத்திய திட்டங்களின் பயன்கள் மாநில மக்களுக்குக் கிடைக்காமல் போனதற்கு காரணமே ஆளும் திமுகதான். அத்துடன் தமிழகத்தில் பெண்களின் அவல நிலைக்குக் காரணமும் திமுகதான்’ என்றாா்.

Story image
Story image