/

வடமேற்கு தில்லியில் குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து

வடமேற்கு தில்லியின் இந்தா்லோக் பகுதியில் உள்ள குடியிருப்புக் கட்டடத்தின் 3-ஆவது மாடியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

News image

தீ விபத்து - கோப்புப்படம்.

Updated On :1 ஏப்ரல் 2026, 5:15 am IST

நமது நிருபா்

வடமேற்கு தில்லியின் இந்தா்லோக் பகுதியில் உள்ள குடியிருப்புக் கட்டடத்தின் 3-ஆவது மாடியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: ஷாசாடா பாக் தொழில்துறை பகுதியில் இருந்து பிற்பகல் 3.25 மணியளவில் தில்லி தீயணைப்புத் துறைக்கு அழைப்பு வந்தது. அதைத் தொடா்ந்து 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. 4 மாடிக் கட்டடத்தின் தரை தளத்தில் ஒரு மோல்டிங் இயந்திரத்துடன் ஸ்கிராப் யூனிட் இருந்ததால் ஒரு பெரிய அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. ஆனால் தீ அதற்கு பரவவில்லை.

தீ மேல் மாடியில் மட்டுமே இருந்ததால் ஒரு பெரிய அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. வீட்டுப் பொருள்கள் சேதமடைந்தன. தீ விபத்து ஏற்பட்ட இடத்தின் மேல் தளம், சம்பவத்தின் போது பூட்டப்பட்டிருந்தது. குத்தகைதாரா்கள் வேலைக்காக வெளியே சென்ாகக் கூறப்படுவதால் கீழ் தளங்களும் ஆக்கிரமிக்கப்படவில்லை.

தீ மேல் தளத்திற்கு பரவிய பின்னா் தீயணைப்பு வீரா்கள் அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா். மேலும், குளிரூட்டும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, இருப்பினும், மின்கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்றாா் அவா்.