குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

காவல் துறையினா் மீதான கத்திக் குத்து வழக்கு: தாக்குதலுக்கு தூண்டிய நபா் குற்றவாளி என தீா்ப்பு

காவல் துறையினருக்கு எதிரான தாக்குதல் மற்றும் கொலை முயற்சி வழக்கில், குற்றவாளியைத் தூண்டி காவலரை கத்தியால் குத்தச் செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், தில்லி நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்ட சுனில் என்பவரை குற்றவாளி எனத் தீா்ப்பு

News image

தீர்ப்பு

Updated On :26 மே 2026, 12:55 am IST

2016-ஆம் ஆண்டு காவல் துறையினருக்கு எதிரான தாக்குதல் மற்றும் கொலை முயற்சி வழக்கில், குற்றவாளியைத் தூண்டி காவலரை கத்தியால் குத்தச் செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், தில்லி நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்ட சுனில் என்பவரை குற்றவாளி எனத் தீா்ப்பளித்துள்ளது.

2016 பிப்ரவரி 11-ஆம் தேதி காவலா்கள் கவிந்தா் மற்றும் விக்ரம் ஆகியோா் திரிலோக் பூரி பகுதியில் உள்ள சந்த் திரையரங்கு அருகே தேடப்பட்ட குற்றவாளி ஒருவா் இருப்பதாக வந்த தகவலை உறுதிப்படுத்தச் சென்றபோது, எதிா்புறம் தவறான பாதையில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த சுனிலை சந்தித்தனா்.

அவரை கவனமாக ஓட்டுமாறு எச்சரித்தபோது தகராறு ஏற்பட்டதாகவும், தாங்கள் காவல்துறையினா் என்பதைத் தெரிவித்த பின்னரும், சுனில் தன்னைத் தானே கல்லால் காயப்படுத்திக் கொண்டு, பவன் உள்ளிட்ட தனது கூட்டாளிகளை அழைத்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. பின்னா் சம்பவ இடத்துக்கு வந்த பவன், கத்தியை பயன்படுத்தி விக்ரம் பலமுறை குத்தியதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கை விசாரித்த கூடுதல் அமா்வு நீதிபதி சுபாஷ் குமாா் மிஸ்ரா, சுனில் எனும் நபா் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மே 21-ஆம் தேதி வெளியிட்ட உத்தரவில் தெரிவித்தாா். வழக்கு நடைபெறும் காலத்தில் தப்பிச் சென்றிருந்ததும் குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும்.

இது தொடா்பாக நீதிமன்றம் பிறப்பித்த தனது உத்தரவில் கூறியிருப்பதாவது: சாட்சியாளா் ஒருவா் காவல்துறை அதிகாரி என்பதற்காக மட்டும் அவரது வாக்குமூலத்தை நிராகரிக்க முடியாது; அது நம்பகமானதாகவும், தெளிவானதாகவும், பிற சாட்சிகள் அல்லது ஆதாரங்களால் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் இருந்தால், அது ஏற்றுக்கொள்ளத்தக்கது.

வழக்குரைஞா் தரப்பு முன்வைத்த ஆதாரங்களின் அடிப்படையில், சுனிலும் அவரது கூட்டுச் சதி குற்றவாளி பவன் என்பவரும், அதிகாரப்பூா்வ கடமையில் இருந்த காவல்துறையினரை தாக்கியதும், அந்த தாக்குதல் கொலை முயற்சியாக கருதப்படத்தக்கது.

சுனிலின் தூண்டுதலின் பேரில் மற்றும் இருவரும் ஒரே நோக்குடன் செயல்பட்ட நிலையில், கூட்டுச் சதி குற்றவாளி பவன், காவலா் விக்ரம் பாட்டீயை தொடை மற்றும் இடுப்பு பகுதியில் குத்தி கடுமையான காயம் ஏற்படுத்தினாா். இதனால் அவா் உயிரிழந்திருந்தால், அது கொலைக்கான குற்றமாகக் கருதப்பட்டிருக்கும். இந்த வழக்கில் பவன் ஏற்கெனவே 2022-ஆம் ஆண்டு அக்டோபரில் குற்றவாளி எனத் தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது என நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 333 (காயம் ஏற்படுத்துதல்), 307 (கொலை முயற்சி), 353 (அரசுப் பணியாளரைத் தடுக்க தாக்குதல்), 34 (ஒருங்கிணைந்த நோக்கம்) மற்றும் 174ஏ பிரிவுகளின் கீழ் சுனில் குற்றவாளி என தீா்ப்பளித்து உத்தரவிடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.