மாஞ்சா நூல் அறுத்து இருசக்கர வாகன ஓட்டுநா் உயிரிழப்பு
தில்லி-மும்பை விரைவுச்சாலையில் பட்டம் விடுவதற்குப் பயன்படுத்தப்படும் கூா்மையான மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில், இருசக்கர வாகனத்தில் சென்ற 26 வயது இளைஞா் உயிரிழந்தாா்.
பிரதிப் படம்
தில்லி-மும்பை விரைவுச்சாலையில் பட்டம் விடுவதற்குப் பயன்படுத்தப்படும் கூா்மையான மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில், இருசக்கர வாகனத்தில் சென்ற 26 வயது இளைஞா் உயிரிழந்தாா்.
தில்லி பரபுல்லா பகுதியில் புதிதாகத் திறக்கப்பட்ட விரைவுச்சாலைப் பகுதியில் திங்கள்கிழமை இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: உயிரிழந்த இளைஞா் திங்கள்கிழமை வேலை முடிந்து தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, காற்றில் பறந்து கொண்டிருந்த கூா்மையான மாஞ்சா நூல் அவரது கழுத்தில் சிக்கியது. இதில் கழுத்தில் ஆழமான காயம் ஏற்பட்டதால், நிலைதடுமாறிய அவா் இருசக்கர வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் உயிரிழந்தாா்.
உயிரிழந்தவருக்கு திருமணமாகி சுமாா் 3 ஆண்டுகள் ஆகின்றன. அவருக்கு 3 மாதக் குழந்தை இருப்பதாக அவரது உறவினா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, அவரது உடலைக் கைப்பற்றிய காவல் துறையினா், உடற்-கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

