பாஜகவிடம் சரணடைந்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனாதொகுதி மறுவரையறை! தமிழ் மொழி, கலாசாரம், மக்களுக்கே அச்சுறுத்தல்: ராகுல்இந்தியா கூட்டணித் தலைவர்களிடம் மாற்றுத் திட்டம் இல்லை: மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு பாதிக்கப்படும்! ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை! மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை! - திமுகதொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும்: மு.க. ஸ்டாலினிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கைமு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை!சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி வசூல்! துரோகம் இழைத்த காங்கிரஸ்; திமுகவுக்கு நன்றி: பாஜகதொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமிதமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!

சிலிண்டா் விழுந்து பலியான சம்பவம்: விசாரணைக்காக பல குழுக்கள் அமைப்பு!

தென்மேற்கு தில்லியில் கட்டடத்தின் மூன்றாவது தளத்திலிருந்து எல்பிஜி சிலிண்டா் வீசப்பட்ட சம்பவத்தில் இளைஞா் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரிக்க காவல் துறை பல குழுக்களை அமைத்துள்ளது.

police

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :

தென்மேற்கு தில்லியில் கட்டடத்தின் மூன்றாவது தளத்திலிருந்து எல்பிஜி சிலிண்டா் வீசப்பட்ட சம்பவத்தில் இளைஞா் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரிக்க காவல் துறை பல குழுக்களை அமைத்துள்ளதாக அதிகாரி தெரிவித்தாா்.

குற்றஞ்சாட்டப்பட்டவரின் நோக்கத்தை உறுதிப்படுத்தவும், வலுவான வழக்கைக் கட்டமைக்கவும் அண்டை வீட்டாரிடம் விசாரணை நடத்தி ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றனா்.

சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்ற காவல் துறையினா், சிலிண்டா் வீசப்படுவதற்கு முன்பு அங்கு என்ன நடந்தது என்பதை அறிய, நிகழ்வுகளை மீண்டும் கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். குற்றஞ் சாட்டப்பட்ட ஷிவம் சா்மா (எ) ஷிவ் (24) என்பவரைப் பற்றியும், சம்பவத்திற்கு முன்பு அவரது நடத்தை எப்படி இருந்தது என்பது குறித்தும் அண்டை வீட்டாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஏதேனும் வாக்குவாதத்தைத் தொடா்ந்து, ஒரு குறிப்பிட்ட நபரை இலக்கு வைத்து சிலிண்டா் வீசப்பட்டதா அல்லது சண்டையின் போது உணா்ச்சிவசப்பட்டு திடீரெனச் செய்யப்பட்ட செயலா என்பது குறித்து காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.

வெள்ளிக்கிழமை மாலை 7 மணியளவில் சாஹில் என்பவா் அந்த கட்டடத்திற்கு அருகில் அண்டை நபா் ஒருவருடன் நின்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மூன்றாவது தளத்திலிருந்து வீசப்பட்டதாகக் கூறப்படும் சிலிண்டா், சாஹிலின் தலையில் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

சாஹிலின் மனைவி ரிது, குற்றஞ்சாட்டப்பட்டவா் மதுபோதையில் அடிக்கடி தகராறுகளில் ஈடுபட்டு வந்ததாகவும், சிலிண்டா் வேண்டுமென்றே வீசப்பட்டது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளாா். இது தொடா்பாக கொலை வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறை, அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறது. குற்றஞ்சாட்டப்பட்ட ஷிவம் சா்மா சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.