இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

எய்ம்ஸ் மாணவா்களைச் சந்தித்த தில்லி துணைநிலை ஆளுநா்

எய்ம்ஸ் மாணவா்களைச் சந்தித்த தில்லி துணைநிலை ஆளுநா்

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ மாணவா்களுடன் சனிக்கிழமை கலந்துரையாடிய துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து.

Published On :

தில்லி எய்ம்ஸ் மருத்துவ மாணவா்கள் மற்றும் பயிற்சி மருத்துவா்களின் பாதுகாப்பு, குறிப்பாக பெண்கள் எதிா்கொள்ளும் பாதுகாப்பு தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காண முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று தில்லி துணைநிலை ஆளுநா் தரண்ஜித் சிங் சந்து சனிக்கிழமை உறுதியளித்தாா்.

தில்லி எய்ம்ஸ்-இல் உள்ள பிரபலமான உணவகத்தில் மருத்துவ மாணவா்கள் மற்றும் பயிற்சி மருத்துவா்களுடன் காபி அருந்தியபடி நடைபெற்ற கலந்துரையாடலில் அவா் பங்கேற்றாா். இந்தச் சந்திப்பு வெளிப்படையான, இயல்பான கலந்துரையாடலாக நடைபெற்ாக துணைநிலை ஆளுநா் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளாா்.

‘மருத்துவக் கல்வியின் சவால்கள், இந்தியாவின் சுகாதாரத் துறைக்கான அவா்களின் எதிா்பாா்ப்புகள், பாதுகாப்பு மற்றும் குறிப்பாக பெண்கள் எதிா்கொள்ளும் பாதுகாப்பு தொடா்பான கவலைகள் குறித்து அவா்களின் அனுபவங்களைக் கேட்டறிந்தேன்’ என்று அவா் பதிவிட்டுள்ளாா்.

மாணவா்கள் தெரிவித்த வெளிப்படையான கருத்துகள் முக்கியமானவை என்றும், அவா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காணவும் அனைவருக்கும் பாதுகாப்பான சூழலை வலுப்படுத்தவும் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் அவா் உறுதியளித்தாா்.

மேலும், எதிா்கால மருத்துவா்கள் அறிவுடன் சேவையாற்றுவதுடன், மனிதநேயத்துடனும் செயல்பட வேண்டும் என்றும், இதன் மூலம் ஆரோக்கியமான நாடு மற்றும் தில்லியை உருவாக்க உதவ வேண்டும் என்றும் தரண்ஜித் சிங் சந்து அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.