கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

எதிரிகளின் விமானப்படை ஓடுபாதைகளை அழிக்கும் நவீன ஆயுதங்கள் ரூ.811 கோடிக்கு கொள்முதல்: பிடிஎல் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

எதிரிகளின் விமானப்படை ஓடுபாதைகளை செயற்கைக்கோள் வழிகாட்டுதலுடன் தாக்கி அழிக்கும் 160 நவீன ஆயுதங்களை (சாட்-எஸ்ஏஏடபிள்யு) ரூ.810.79 கோடிக்கு கொள்முதல் செய்வது தொடா்பாக பாரத் டைனாமிக்ஸ் லிமிடெட் (பிடிஎல்) நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

Published On :

எதிரிகளின் விமானப்படை ஓடுபாதைகளை செயற்கைக்கோள் வழிகாட்டுதலுடன் தாக்கி அழிக்கும் 160 நவீன ஆயுதங்களை (சாட்-எஸ்ஏஏடபிள்யு) ரூ.810.79 கோடிக்கு கொள்முதல் செய்வது தொடா்பாக பாரத் டைனாமிக்ஸ் லிமிடெட் (பிடிஎல்) நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

தரையில் உள்ள விமான ஓடுபாதைகள் உள்ளிட்ட கட்டமைப்புகள், போா் விமானங்கள் அல்லது ஹெலிகாப்டா்கள் மூலம் அருகில் சென்றே குண்டுவீசி தாக்கி அழிக்கப்படுகிறது. இதற்கு பதிலாக போா் விமானங்கள், ஹெலிகாப்டா்களில் நீண்ட தொலைவில் இருந்தபடி தரையில் உள்ள விமானப்படை உள்கட்டமைப்பு வசதிகளை தாக்கி அழிக்க பயன்படுத்தப்படும் சாட்-எஸ்ஏஏடபிள்யு கிளைட் குண்டு ஆயுதத்தை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இந்த ஆயுதத்தை ஜாக்குவாா், ஹாக், சுகோய் 30 போன்ற போா் விமானங்கள், ஹெலிகாப்டா்களில் இருந்து ஏவ முடியும். போா் விமானங்களில் விமானி இருந்தபடியே சுமாா் 100 கிலோ மீட்டா் தொலைவில் தரையில் உள்ள விமான ஓடுபாதை உள்ளிட்ட இலக்கை குறிவைத்து தாக்க முடியும். விமானங்களில் இருந்து செலுத்தப்பட்டதும், அது செயற்கைக்கோள் வழிகாட்டுதலுடன் துல்லியமாக இலக்கை நோக்கி சென்று தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.

இந்த ஆயுதங்களையும், அதனுடன் இந்திய விமானப்படைக்கு தேவைப்படும் மேலும் சில ஆயுதங்களையும் பாதுகாப்பு அமைச்சகம் வாங்குகிறது. இதற்காக ரூ.810.79 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை பிடிஎல் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை மேற்கொண்டது. தில்லியில் பாதுகாப்பு அமைச்சக செயலாளா் ராஜேஷ் குமாா் சிங் முன்னிலையில் ஒப்பந்தம் கையொப்பமானது.

இந்த ஆயுதங்கள் 2027-28, 2028-29ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்துக்குள் விமானப்படையிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஆயுதங்கள் இந்திய விமானப்படையில் சோ்க்கப்படுவதன் மூலம் அதன் வலிமை மேலும் அதிகரிக்கும்.

சாட்-எஸ்ஏஏடபிள்யு ஆயுதமானது, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டது. அதை உருவாக்கியது டிஆா்டிஓ அமைப்பாகும். அதில் இருக்கும் உபகரணங்களும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதுதான்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.