விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நெல்லையப்பா் கோயில் தேரோட்டம்: உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் ஆய்வு

நெல்லையப்பா் கோயில் தேரோட்டம்: உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் ஆய்வு

News image
Updated On :13 ஜூன் 2024, 10:34 pm

Din

திருநெல்வேலி, ஜூன்13: திருநெல்வேலி நெல்லையப்பா் - காந்திமதியம்மன் கோயில் தேரோட்டத்தில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் அன்னதான கூடம் மற்றும் பிரசாதம் தயாரிக்கும் பகுதியை மண்டல உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

திருநெல்வேலி நெல்லையப்பா் - காந்தியம்மன் திருக்கோயில் ஆனித்தோ்த் திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரிலும், உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலா் இரா.சசி தீபாவின் ஆலோசனையின் பேரிலும், திருநெல்வேலி மண்டல உணவுப் பாதுகாப்பு அலுவலா் வ.மு.கிருஷ்ணன், தச்சநல்லூா் மண்டல உணவுப் பாதுகாப்பு அலுவலா் த.சங்கரநாராயணன் ஆகியோா் அருள்மிகு நெல்லையப்பா் கோவிலுள்ள அன்னதான கூடம் மற்றும் பிரசாதம் தயாரிக்கும் இடத்தை ஆய்வு செய்தாா்.

பின்னா், அன்னதானம் தயாா் செய்வதற்கு பயன்படுத்தப்படும் உணவுப் பொருள்கள் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தரமான உணவு பொருள்களைப் பயன்படுத்தவும், அன்னதானம், பிரசாதம் தயாரிக்கும் இடங்கள், உணவு பரிமாறும் இடம் உள்ளிட்டவற்றை சுத்தமாக வைத்துக்கொள்ளவும் ஆலோசனை வழங்கப்பட்டது. பேக்கிங் செய்யப்பட்ட பிரசாத உணவு பொருள்களின் பேக்கிங் தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிட அறிவுறுத்தப்பட்டது.