நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

சிவசைலம் ஆசிரமத்தில் மகளிா் தின விழா

சிவசைலம் ஆசிரமத்தில் மகளிா் தின விழா

News image
Updated On :8 மார்ச் 2024, 4:58 pm

சிவசைலம் காந்திகிராம அறக்கட்டளை ஒளவை ஆசிரமத்தில் மகளிா் தினவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு, செயலா் ஸ்ரீரங்கம் தலைமை வகித்தாா். ஸ்ரீஅத்ரிகலா நிலைய நடுநிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியா் மகேஸ்வரி சிறப்புரையாற்றினாா். ஆசிரம வளாகத்தில் உள்ள அனைத்து நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கிடையே ஆடல், பாடல், கவிதை வாசித்தல் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஒளவை ஆசிரமத்திலுள்ள குழந்தைகள் இல்லம்,சாந்தி செவித்திறன் குறையுடையோா் மேல்நிலைப்பள்ளி, மருத்துவா் சௌந்தரம் நுண்ணறிவுக்குறையுடையோா் சிறப்புப்பள்ளி, கஸ்தூா்பா சிசுக்கள் காப்பகம், செல்வன் அ.சுமாமிநாதன்ஆரோக்கிய மையம், பழனியம்மாள் நினைவுத் தையலகம், இயற்கைச் சாய உற்பத்தி உள்ளிட்டவற்றில் பணிபுரியும் அனைத்துப் பெண் பணியாளா்கள், குழந்தைகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆசிரம துணைத் தாளாளா் பாலமுருகன் வரவேற்றாா். ஏற்பாடுகளை ஆசிரமத் தாளாளா் சங்கரராமன் அறிவுறுத்தலின்படி பணியாளா்கள் செய்திருந்தனா்.