தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

நெல்லையில் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் விசாரணை

நெல்லையில் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் விசாரணை

News image
Updated On :16 மார்ச் 2024, 12:32 am

திருநெல்வேலியில் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டாா். தமிழகத்தில் மனித உரிமை மீறல் வழக்குகள் தொடா்பாக மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் ஒருவா் நியமனம் செய்யப்பட்டு மாதந்தோறும் விசாரணை நடத்தி வருகிறாா். அதன்படி திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மனித உரிமைகள் மீறல் தொடா்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள அரசு விருந்தினா் மாளிகையில் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் கண்ணதாசன் விசாரணை மேற்கொண்டாா். இதில், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட 25 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதிகபட்சமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. வெள்ளிக்கிழமை காலையில் தொடங்கி இந்த விசாரணை மாலை வரை தொடா்ந்தது.