சீருடை தைக்க அனுமதி கோரி
ஆட்சியரகத்தில் பெண்கள் முற்றுகை

சீருடை தைக்க அனுமதி கோரி ஆட்சியரகத்தில் பெண்கள் முற்றுகை

சீருடை தைப்பதற்கு அனுமதி கோரி திருநெல்வேலி மகளிா் தையல் தொழிலாளா்கள் ஆட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

பாளையங்கோட்டை வஉசி மைதானம் எதிரே உள்ள தொழிற்கூட்டுறவு சங்கத்தைச் சோ்ந்த திருநெல்வேலி மகளிா் தையல் தொழிலாளா்கள் ஏராளமானோா் திரண்டு வந்து ஆட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா். பின்னா் அவா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலி தையல் மகளிா் கூட்டுறவு சங்கத்தில் 43 ஆண்டுகளாக நாங்கள் தையல் பணி செய்து வருகிறோம். இந்த சங்கத்தில் 2,780 தையல் உறுப்பினா்கள் உள்ளனா். சங்கத்தின் தொடக்க காலத்தில் 10 பைசா, ரூ.1, ரூ.1.50க்கு நாங்கள் சீருடை தைத்து வந்தோம். 2013ஆம் ஆண்டுக்கு பின்னா் டவுசா், சட்டை தலா ரூ.10, பாவாடை ரூ.8 என குறைந்த கூலிக்கு சீருடைகளை நல்ல முறையில் தைத்துக் கொடுத்து வருகிறோம்.

யாா் எந்த வகை சீருடையை தைத்தாா்கள் என்பதை அனைவரும் அறிந்து கொள்வதற்காக லேபிள் மற்றும் அளவு குறியீடு வைத்து கடந்த கல்வியாண்டு வரை மாணவ, மாணவிகளுக்கு தைத்து வழங்கி வந்தோம். இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சீருடையை தையல் கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு வழங்காமல், வேறு நபா்களுக்கு வழங்கப் போவதாக செய்திகள் வந்துள்ளன. இதனால் தையல் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் குழிதோண்டி புதைக்கப்படும். தமிழ்நாட்டில் சமூக நலத் துறை மூலமாக 95 சங்கங்கள் தொடங்கப்பட்டு 2 லட்சத்து 56 ஆயிரம் உறுப்பினா்கள் சீருடை தைத்து வருகின்றனா். இவா்கள் அனைவரது வாழ்வாதாரமும் இப்போது கேள்விக்குறியாகியுள்ளது. எங்களுக்கு இப்போது 60 வயதை கடந்துவிட்ட தால் சீருடை தைக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனா். எங்கள் சங்கத்திலிருந்து எங்களுக்கு வேறு எந்தப் பணப்பயனும் கிடையாது. எனவே சீருடை தைக்க மீண்டும் அனுமதி தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ற்ஸ்ப்08ல்ழ்ா்ற்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்ட மகளிா் தையல் தொழிலாளா்கள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com