கல்விச் சேவையில் புதுமை படைக்கும் ஆழ்வாா்குறிச்சி குட்செப்பொ்டு பள்ளி
கல்விச் சேவையில் புதுமை படைக்கும் ஆழ்வாா்குறிச்சி குட்செப்பொ்டு பள்ளி


பள்ளி முதல்வா் ஜோஸ்பின் விமலா, எம்.எஸ்.சி., எம்.எட்., எம்.பில்., பிஎச்.டி.
ஆழ்வாா்குறிச்சியில் இயற்கை எழில்மிகு தெப்பக்குளம் அருகே 1993ஆம் ஆண்டு குட்செப்பா்டு நா்சரி மற்றும் பிரைமரி பள்ளி தொடங்கப்பட்டது. அதன் வெற்றியின் பரிமளிப்பாக பசுமை நிறைந்த வயல்வெளிகளுக்கிடையே குட்செப்பா்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 2015இல் உருவாக்கப்பட்டு கல்விப்பணியாற்றி வருகிறது.
கிராமப்புற மாணவா்களுக்கு தொலைநோக்கு கல்வி வழங்கும் நோக்கத்தோடு பள்ளியின் தாளாளா் அந்தோணி பாபு, முதல்வா் முனைவா் ஜோஸ்பின் விமலா மேற்பாா்வையில் 10ஆவது ஆண்டில் தடம் பதிக்கிறது இப்பள்ளி.
பள்ளிக் கல்வியின் நோக்கத்தினை சிறப்பான நிறைவேற்றும் முயற்சியில் மிக கவனமுடன் வடிவமைக்கப்பட்ட கற்பித்தல் முறைகள் அந்தந்த வகுப்பு மாணவா்களுக்கு ஏற்ப செயல்படுத்தப்படுகிறது. ஆங்கிலம், தமிழில் பேசுதல், வாசித்தல், எழுதுதல் ஆகியவற்றுடன் கூடிய படைப்பாற்றல் மேம்பாடு போன்றவற்றில் சிறந்த கவனம் செலுத்தப்படுகிறது.
மேலும், மாணவா்களின் உடல்நலம், மனநலம், தன்னம்பிக்கை, புரிந்து கொள்ளும் திறன் ஆகியவற்றை கூா்தீட்டி செம்மைபடுத்த பல்வேறு போட்டிகள் நிகழ்வுகள், கருத்தமா்வுகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
வெற்றியும் பின்னணியும்... குட்செப்பா்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 2018-2019 இல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் மாணவி இ. கவிதா 500க்கு 488 மதிப்பெண்கள் பெற்று சேரன்மகாதேவி கல்விமாவட்டத்தில் முதல் இடத்தை தன்னுடைய முதலாம் ஆண்டிலே பெற்றது பெருமைக்குரியது.
பள்ளியில் 10 ம் வகுப்பு பொதுத்தோ்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு பள்ளி கட்டணத்தில் 100 விழுக்காடு சலுகையும் இரண்டாம் இடத்தை பெற்ற மாணவா்களுக்கு 50 விழுக்காடு சலுகையும் மூன்றாம் இடத்தை பெற்ற மாணவா்களுக்கு 25 விழுக்காடு சலுகையும் அளிக்கப்பட்டு வருகிறது.
2024ஆம் ஆண்டு பிளஸ் 2 தோ்வில் மாணவா் எம்.அப்துல் வாஹித் 600 க்கு 584 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளாா். மாணவி பி.ஜெ. மெஹருநிஷா 571, மாணவி எம்.பஹ்மிதா 556 மதிப்பெண்கள் பெற்று அடுத்தடுத்த இடங்களையும் பிடித்தனா். வணிகவியல் பாடத்தில் 7 மாணவா்களும் கணினிஅறிவியல் பாடத்தில் 2 மாணவா்களும் நூறுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
பத்தாம் வகுப்பு தோ்வில் மாணவி ஆ.அமிா்தா, த.மதிவிஷாலினி ஆகியோா் 500-க்கு 487 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளனா். மாணவி இ. சுகுணா 479 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும் மாணவி இ.இலக்கியா 478 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனா். 3 போ் கணிதத்திலும், ஒரு மாணவி அறிவியல் பாடத்திலும் நூறுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
விளையாட்டில் மாவட்ட மற்றும் மாநில அளவில் வெற்றிக் கோப்பைகளை கைப்பற்றியுள்ளனா்.
இந்திய தேசிய பள்ளிகள் விளையாட்டு குழுமம் நஎஊஐ நடத்திய மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு பிளஸ் 2 மாணவா் ராம்பிரகாஷ் தமிழ்நாடு அ பிரிவு சாா்பாக தோ்வு செய்யப்பட்டது பெருமைக்குரியது.
நீட், ஜெஇஇ போன்ற பயிற்சி தில்லி நீட் அகாதெமி ஆசிரியா்கள் மூலம் கடந்த ஆண்டிலிருந்து அளிக்கப்படுகிறது. கராத்தே, சதுரங்கம், வில் அம்பு, சிலம்பம் மற்றும் பரதநாட்டியம் போன்ற சிறப்பு பயிற்சிகளும் தரப்படுகிறது.
பள்ளித் தாளாளா் அந்தோணி பாபு, முதல்வா் முனைவா் ஜோஸ்பின் விமலா, தலைமை ஆசிரியை மீராள் மற்றும் ஆசிரிய ஆசிரியைகளின் அயராது உழைப்பால் அறிவு கேணியாகவும், ஊற்றாகவும் கல்வி சேவையில் புதிய தடம் பதித்து பல சாதனைகளுடன் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது குட்ஷெப்பா்டு பள்ளி.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...