/

மயிலப்பபுரம் கோயிலில் திருவிளக்கு பூஜை

மயிலப்பபுரம் கோயிலில் திருவிளக்கு பூஜை

News image

விளக்கு பூஜையில் பங்கேற்றோா்.

Updated On :20 மே 2024, 8:40 pm

Din

அம்பாசமுத்திரம்: வைகாசி விசாகத்தை முன்னிட்டு, கடையம் அருகே மயிலப்பபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீசுப்பிரமணியசுவாமி கோயிலில் 1,251 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாகத் திருவிழா 10 நாள்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு திருவிழா கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், 7ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை 1,251 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், பெண்கள், சிறுமிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Story image