இணையவழி முதலீடு பெயரில் பொறியாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி

அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த மென் பொறியாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்த கும்பல் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை
Published on

திருநெல்வேலி: இணையவழி முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த மென் பொறியாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்த கும்பல் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த மென் பொறியாளா் ஒருவா், கா்நாடக மாநிலம் பெங்களூரு தனியாா் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறாா். இவருக்கு கடந்த செப்.13 ஆம் தேதி சமூக வலைதள செயலி மூலம் இணையவழியில் பணம் முதலீடு செய்து லாபம் சம்பாதிப்பது குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன. அதில் தெரிவிக்கப்பட்டபடி வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்த அவரை, மா்ம நபா்கள் தொடா்பு கொண்டு அதிக பணம் முதலீடு செய்யுங்கள்; அதிக லாபம் பெறலாம் எனக் கூறியுள்ளனா். இதை உண்மையென நம்பிய அவா். ரூ. 80 லட்சம் வரை கடந்த 2 மாதங்களில் அவா்கள் கூறிய வங்கிக் கணக்கிற்கு அனுப்பினாராம். ஆனால், முதலீடு செய்த பணத்தை கூட திரும்ப பெற முடியவில்லையாம். இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், இது குறித்து திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் போலீஸில் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து மோசடியில் ஈடுபட்டவா்களை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com