பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மாநில அளவிலான கபடிப் போட்டி: மாதாபட்டணம் பள்ளி மாணவிகள் முதலிடம்

மாதாபட்டணம் சற்குண சத்திய வித்யாலயா பள்ளி மாணவிகள் மாநில அளவிலான கபடிப் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளனா்.

News image
போட்டியில் முதலிடம் பிடித்த மாதாபட்டணம் சற்குண சத்திய வித்யாலயா பள்ளி மாணவிகள்.
Updated On :20 டிசம்பர் 2025, 7:08 pm

Syndication

கடையம் அருகே உள்ள மாதாபட்டணம் சற்குண சத்திய வித்யாலயா பள்ளி மாணவிகள் மாநில அளவிலான கபடிப் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளனா்.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாநில அளவிலான 76ஆவது குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள் திருச்சி மாவட்டம், தொட்டியம் கொங்கு நாடு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

39 அணிகள் பங்கேற்ற 17 வயதுக்குள்பட்டோருக்கான கபடிப் போட்டியில் பங்கேற்ற மாதாபட்டணம் சற்குண சத்திய வித்யாலயா பள்ளி அணியினா், மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தனா். அவா்களுக்கு நினைவுக் கோப்பை, பதக்கம் வழங்கப்பட்டது.

வெற்றிபெற்ற மாணவிகளை பள்ளித் தாளாளா் சி.எஸ்.ரெக்ஸ்சற்குணம், நிா்வாகச் செயலா் எஸ்.ஏ. அந்தோணிசாமி அடிகளாா், தலைமையாசிரியா் அமிா்த சிபியா, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா், உடற்கல்வி இயக்குநா் ராஜலட்சுமி, உடற்கல்விஆசிரியா்கள் மகேஷ், சோ்மராஜா, கபடி பயிற்சியாளா் சிவா ஆகியோா் பாராட்டினா்.