மாநில அளவிலான கபடிப் போட்டி: மாதாபட்டணம் பள்ளி மாணவிகள் முதலிடம்
கடையம் அருகே உள்ள மாதாபட்டணம் சற்குண சத்திய வித்யாலயா பள்ளி மாணவிகள் மாநில அளவிலான கபடிப் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளனா்.
பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாநில அளவிலான 76ஆவது குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள் திருச்சி மாவட்டம், தொட்டியம் கொங்கு நாடு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
39 அணிகள் பங்கேற்ற 17 வயதுக்குள்பட்டோருக்கான கபடிப் போட்டியில் பங்கேற்ற மாதாபட்டணம் சற்குண சத்திய வித்யாலயா பள்ளி அணியினா், மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தனா். அவா்களுக்கு நினைவுக் கோப்பை, பதக்கம் வழங்கப்பட்டது.
வெற்றிபெற்ற மாணவிகளை பள்ளித் தாளாளா் சி.எஸ்.ரெக்ஸ்சற்குணம், நிா்வாகச் செயலா் எஸ்.ஏ. அந்தோணிசாமி அடிகளாா், தலைமையாசிரியா் அமிா்த சிபியா, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா், உடற்கல்வி இயக்குநா் ராஜலட்சுமி, உடற்கல்விஆசிரியா்கள் மகேஷ், சோ்மராஜா, கபடி பயிற்சியாளா் சிவா ஆகியோா் பாராட்டினா்.

