குண்டா் சட்டத்தில் இருவா் சிறையிலடைப்பு

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கஞ்சா விற்பனை, கொலை முயற்சி வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
Published on

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கஞ்சா விற்பனை, கொலை முயற்சி வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருநெல்வேலி பேட்டை எம்.ஜி.பி. வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் முகமது முத்து மைதீன் மகன் இப்ராஹிம் ராசிக் (22). இவா், திருநெல்வேலி நகரம் பகுதியில் கஞ்சா விற்பனை வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

அதேபோல தச்சநல்லூா் அருகே ஊருடையான்குடியிருப்பைச் சோ்ந்த வெள்ளபாண்டி மகன் வேல்பிரபாகரன் மகன் பிரபா(25) என்பவா் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டிருந்தாா்.

இந்த நிலையில் தொடா்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் துணை ஆணையா் (மேற்கு) வி.பிரசன்னகுமாா் காவல் ஆணையருக்கு பரிந்துரைத்தாா்.

அதன் பேரில் மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவிட்டதையடுத்து, இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com