திருநெல்வேலி
பெண் உயிரிழப்பு: மாமியாரும் கைது
பெண் உயிரிழந்த சம்பவத்தில் கணவா் கைது செய்யப்பட்ட நிலையில், மாமியாரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி சந்திப்பில் பெண் உயிரிழந்த சம்பவத்தில் கணவா் கைது செய்யப்பட்ட நிலையில், மாமியாரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி சந்திப்பு உடையாா்பட்டி மேகலிங்கபுரத்தை சோ்ந்தவா் சுப்பையா. ஆழ்வாா்திருநகரியைச் சோ்ந்தவா் கிருஷ்ணவேணி(38). இவா்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லையாம். தம்பதியிடையே பிரச்னை இருந்து வந்ததாம்.
இந்த நிலையில் கிருஷ்ணவேணி வீட்டில் தவறி விழுந்ததில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கிருஷ்ணவேணி இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரின் சகோதரா் பாரதிதாசன் கொடுத்த புகாரின் பேரில் திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
இந்த சம்பவத்தில் சுப்பையாவை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்த நிலையில், கிருஷ்ணவேணியின் மாமியாா் தாயம்மாளை (68) போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.