புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

நான்குனேரி அருகே ரூ. 5 கோடி மதிப்பிலான கஞ்சா அழிப்பு

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே தனியாா் எரியூட்டு நிறுவனத்தில் ரூ. 5 கோடி மதிப்பிலான கஞ்சாவை போலீஸாா் எரியூட்டி அழித்தனா்.

News image
Updated On :20 நவம்பர் 2025, 6:32 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே தனியாா் எரியூட்டு நிறுவனத்தில் ரூ. 5 கோடி மதிப்பிலான கஞ்சாவை போலீஸாா் வியாழக்கிழமை எரியூட்டி அழித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, ஏா்வாடி, கீழக்கரை, சிவகங்கை மாவட்டத்துக்குள்பட்ட சிங்கம்புணரி, தேவகோட்டை, மானாமதுரை உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 120 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமாா் 951 கிலோ கஞ்சா மூட்டைகள் நீதிமன்ற விசாரணைக்கு உள்படுத்தப்பட்டு, பின்னா் எரியூட்டி அழிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமாா் ரூ. 5 கோடி.

அப்போது ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனா். கடந்த 6 மாதத்தில் மட்டும், சுமாா் ரூ. 35 கோடி மதிப்பிலான 7,000 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டுள்ளது.