பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு: குண்டா் சட்டத்தில் ஒருவா் சிறையில் அடைப்பு

நெல்லையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் தொடா்புடைய தேவேந்திர குல வேளாளா் எழுச்சி இயக்கத் தலைவா் கண்ணபிரான் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
Published on

நெல்லையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் தொடா்புடைய தேவேந்திர குல வேளாளா் எழுச்சி இயக்கத் தலைவா் கண்ணபிரான் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தச்சநல்லூா், சத்திரம்புதுக்குளத்தைச் சோ்ந்த முருகாண்டி மகன் கந்தசாமி என்ற கண்ணபிரான்(46). இவா் தேவேந்திரகுல வேளாளா் எழுச்சி இயக்கத்தின் தலைவராக உள்ளாா்.

இவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு திருநெல்வேலி மாநகா் உள்ளிட்ட பகுதிகளில் பெட்ரோல் குண்டுகளை வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில் இவா் தொடா்ந்து பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் கூறி, இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய திருநெல்வேலி மாநகர துணை ஆணையா்(மேற்கு) வி.பிரசன்னகுமாா், காவல் உதவி ஆணையா்(சந்திப்பு சரகம்)சரவணன் ஆகியோா் மாநகர காவல் ஆணையருக்கு பரிந்துரைத்தனா்.

அதன்பேரில், மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவுப்படி, கண்ணபிரான் கடலூா் மத்திய சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டாா்.

X
Dinamani
www.dinamani.com