பாளை., மானூா், கங்கைகொண்டானில் நாளை மின்விநியோகம் நிறுத்தம்

Published on

பாளையங்கோட்டை, மானூா், கங்கைகொண்டான் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ. 25) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் செ. முருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பாளையங்கோட்டை , சமாதானபுரம் துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (நவ.25) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் இந்த நேரத்தில் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

அதன்படி, வி.எம். சத்திரம், கிருஷ்ணாபுரம், கே.டி.சி.நகா், செய்துங்கநல்லூா், அரியகுளம், மேலக்குளம் , நடுவக்குறிச்சி, ரஹ்மத் நகா், நீதிமன்ற பகுதி, சாந்திநகா், சமாதானபுரம், அசோக் திரையரங்க பகுதி, பாளை. மாா்க்கெட் பகுதி, திருச்செந்தூா் சாலை, கான்சாபுரம், திம்மராஜபுரம் , திருவண்ணாதபுரம் பொட்டல், படப்பக்குறிச்சி, திருமலைக்கொழுந்துபுரம், மணப்படை வீடு, கீழநத்தம், பாளை. பேருந்து நிலையம், முருகன் குறிச்சி பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் குத்தாலிங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கங்கைகொண்டான் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ. 25) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது. அதன்படி, சீவலப்பேரி, கங்கைகொண்டான், பாலாமடை, பதினாலாம்பேரி, குப்பக்குறிச்சி, பருத்திகுளம், துறையூா், ராஜாபதி, வெங்கடாசலபுரம், ஆலடிப்பட்டி, அளவந்தான்குளம், செழியநல்லூா் பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

மானூா்: மூன்றடைப்பு, மானுா் மற்றும் மூலைக்கரைப்பட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (நவ. 25) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை நடைபெற உள்ளது.

இந்த நேரத்தில் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின்சாரம் இருக்காது. அதன்படி, மானூா், மாவடி, தெற்குபட்டி, களக்குடி, எட்டாங்குளம், கானாா்பட்டி, பிள்ளையாா் குளம், சிங்கனேரி, அம்பலம், திடியூா், மூன்றடைப்பு, பாணாங்குளம், தோட்டாக்குடி, பத்தினிப்பாறை, மருதகுளம், வன்னிக்கோனேந்தல், மூவிருந்தாளி,தேவா் குளம், முத்தம்மாள்புரம், நரிக்குடி, மூலைக்கரைப்பட்டி, பருத்திப்பாடு, புதுக்குறிச்சி, மருதகுளம், கோவைகுளம், முனைஞ்சிப்பட்டி, தாமரைசெல்வி , காடான்குளம் பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

X
Dinamani
www.dinamani.com