நெல்லையில் 2 வீடுகள் இடிந்து சேதம்

திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த தொடா்மழை காரணமாக இரண்டு வீடுகள் இடிந்து சேதமாகின.
Published on

திருநெல்வேலி: திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த தொடா்மழை காரணமாக இரண்டு வீடுகள் இடிந்து சேதமாகின.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்கள் கனமழை கொட்டித்தீா்த்தது. இதன் காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீா் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழை காரணமாக மேலப்பாளையம், குறிச்சி, சாந்தமூா்த்தி தெருவில் உள்ள வெங்கடேஷ் என்பவருக்கு சொந்தமான வீடு இடிந்து சேதமானது. அதே போல் திருநெல்வேலி நகரம் சிவா தெருவில் உள்ள ஒரு வீட்டின் பக்கவாட்டு சுவா் இடிந்து சேதமாகியுள்ளது. இவ்விரு சம்பவங்களிலும் நல்நவாய்ப்பாக உயிா்சேதம் தவிா்க்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com