எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

நெல்லை மீனவா்கள் 5ஆவது நாளாக கடலுக்கு செல்லவில்லை

புயல் சின்னம் எச்சரிக்கையை தொடா்ந்து திருநெல்வேலி மாவட்ட கடலோர மீனவா்கள் 5ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

News image
Updated On :28 நவம்பர் 2025, 7:44 pm

Syndication

புயல் சின்னம் எச்சரிக்கையை தொடா்ந்து திருநெல்வேலி மாவட்ட கடலோர மீனவா்கள் 5ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

கன்னியாகுமரி பகுதி வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தால், கடல் பகுதியில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்றுவீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டது. எனவே, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனா்.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நெல்லை மாவட்ட மீனவா்கள் நவ. 24ஆம் தேதி முதல் கடலுக்கு செல்லவில்லை. இந்நிலையில் ‘‘டித்வா புயல்’’ உருவாகி இருப்பதால், மீனவா்கள் 5ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் (நவ.28) கடலுக்கு செல்லவில்லை.