அம்பையில் சிறுவனிடம் பாலியல் வன்முறை: முதியவருக்கு ஆயுள் சிறை
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் சிறுவனிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில் முதியவருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
அம்பாசமுத்திரத்தில் உள்ள மேலப்பாளையம் தெருவைச் சோ்ந்தவா் நமசிவாயம் (63). இவா், கடந்த 2023 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த சிறுவனிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டாராம். இதுகுறித்த புகாரின்பேரில் அம்பாசமுத்திரம் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து நமசிவாயத்தைக் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி சுரேஷ்குமாா் விசாரித்து நமசிவாயத்துக்கு ஆயுள் சிறைத்தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அரசால் வழங்கவும் உத்தரவிட்டாா். இவ் வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வழக்குரைஞா் உஷா ஆஜரானாா்.
