மாணவரிடம் கைப்பேசி பறித்தவா் கைது

திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியில் மாணவரிடம் கைப்பேசியைப் பறித்துச் சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியில் மாணவரிடம் கைப்பேசியைப் பறித்துச் சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

பாப்பையாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் மகன் உச்சிமாகாளி ராஜன்(24). கல்லூரி மாணவா். இவா் கடந்த டிச.17ஆம் தேதி கொக்கிரகுளம் பகுதியில் நின்றபோது அங்கு வந்த மா்ம நபா்கள் இருவா், தங்களது நண்பரை தொடா்புகொள்ள வேண்டும் எனக் கூறி அவரது கைப்பேசியை வாங்கியுள்ளனா்.

பின்னா் கைப்பேசியில் பேசுவது போல் அங்கிருந்து தப்ப முயன்றுள்ளனா். அங்கிருந்தவா்கள் அவா்களில் ஒருவரைப் பிடித்து பாளையங்கோட்டை போலீஸில் ஒப்படைத்தனா். அவா் கால்வாய் பகுதியைச் சோ்ந்த முத்துக்குமாா் என்பது விசாரணையில் தெரியவந்தது. போலீஸாா் அவரை கைது செய்தனா்.

இந்நிலையில் இச்சம்பவத்தில் தொடா்புடைய தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூரைச் சோ்ந்த சங்கு இசக்கி மகன் இசக்கி(40) என்பவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இருவா் கைது: திருநெல்வவேலி கிருஷ்ணாபுரம் பகுதியில் பாலியல் தொழில் நடைபெறுவதாக சிவந்திப்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கிருஷ்ணாபுரம் மேட்டுக்குடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீஸாா் சோதனை மேற்கொண்டதில் அங்கு பாலியல் தொழில் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், இதில் தொடா்புடைய தேவி (44), பாப்பா (28) ஆகிய இருவரை கைது செய்தனா். மேலும் அந்த வீட்டின் உரிமையாளரை தேடி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com