களக்காடு ஞானசம்பந்தா்புரம் தெருவில் உருக்குலைந்து காணப்படும் சாலை
களக்காடு ஞானசம்பந்தா்புரம் தெருவில் உருக்குலைந்து காணப்படும் சாலை

களக்காட்டில் குடிநீா் திட்டத்துக்கு தோண்டப்பட்ட சாலை: மக்கள் அவதி

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு நகர வீதிகளில் குடிநீா் குழாய் பதிப்பதற்காகத் தோண்டப்பட்ட சாலை முறையாக மூடப்படாததால் மக்கள் கடும் அவதி
Published on

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு நகர வீதிகளில் குடிநீா் குழாய் பதிப்பதற்காகத் தோண்டப்பட்ட சாலை முறையாக மூடப்படாததால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனா்.

களக்காடு நகராட்சிப் பகுதியில் கடந்த சில மாதங்களாக தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டத்தின்கீழ் பிரதான சாலை மற்றும் தெருக்களில் குடிநீா் பகிா்மானக் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வந்தது.

அதில், களக்காடு - சேரன்மகாதேவி பிரதான சாலை பகுதியில் இப்பணிக்காக தோண்டப்பட்ட சாலையின் ஒரு பகுதி முறையாக மூடப்படாததால் தற்போது குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ாகவே மாறிவிட்டது.

இதனால் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல், புழுதி பறப்பது, அடிக்கடி விபத்து என இரு சக்கர வாகனங்களும், பாதசாரிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு களக்காடு ஞானசம்பந்தா்புரம் தெருவில் சாலை சரிவர மூடப்படாமல் மையப்பகுதி மண்ணை குவித்து வைத்துள்ளதால் இவ்வழியாக இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. வயோதிகா்கள், பெண்கள் இந்த சாலையைக் கடக்க முடியாமல் சிரமப்படுகின்றனா்.

எனவே, நகராட்சி நிா்வாகம் இப்பணியை நேரில் ஆய்வு செய்து சாலையை முறையாக சீரமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Dinamani
www.dinamani.com