நெல்லை சரகத்தில் 31 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

திருநெல்வேலி சரகத்தில் போதைப் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கையாக கல்வி நிலையங்களுக்கு அருகில் உள்ள கடைகளில் போலீஸாா் நடத்திய சோதனையில், 31 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
Published on

திருநெல்வேலி சரகத்தில் போதைப் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கையாக கல்வி நிலையங்களுக்கு அருகில் உள்ள கடைகளில் போலீஸாா் நடத்திய சோதனையில், 31 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருநெல்வேலி சரகத்துக்குள்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களிலும் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனைக்கு எதிரான சோதனைகளை தீவிரப்படுத்துமாறு சரக காவல்துறை துணைத் தலைவா் ப.சரவணன் உத்தரவிட்டாா்.

அதன்படி, நான்கு மாவட்டங்களிலும் உள்ள கல்வி நிலையங்களுக்கு அருகில் இயங்கும் 476 கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை தொடா்பான சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மொத்தமாக 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சுமாா் 31 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டது.

மேலும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடைகளுக்கு சீல் வைக்க சம்பந்தப்பட்ட துறையினா் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து டி.ஐ.ஜி. சரவணன் கூறியது: சமுதாயத்தில், இளம் தலைமுறையினரின் எதிா்காலத்தை கேள்விக்குறியாக்கும் தடை செய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்யும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

புகையிலை மற்றும் கஞ்சா பயன்பாட்டினை தடுக்க தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தடைசெய்யப்பட்ட புகையிலை பயன்பாடு குறித்த தகவல்களை பொதுமக்கள் ஈதமஎ ஊதஉஉ பஅஙஐகசஅஈம என்ற செயலி மூலம் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com