மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நெல்லையப்பா் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ.23.47 லட்சம்

News image
கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டோா்.
Updated On :23 ஜனவரி 2026, 10:20 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் உண்டியல்களில் ரூ.23.47 லட்சம் காணிக்கை வரவாகியிருந்தது.

இக்கோயிலில் நிறுவப்பட்டுள்ள 22 நிரந்தர உண்டியல்கள் வெள்ளிக்கிழமை திறந்து எண்ணப்பட்டன. இந்து சமய அறநிலையத் துறையின் நாகா்கோவில் உதவி ஆணையா் தங்கம் கண்காணிப்பாளராக செயல்பட்டாா். திருநெல்வேலி மேற்கு சரக இந்து சமய அறநிலையத்துறை ஆய்வா் தனலட்சுமி என்ற வள்ளி முன்னிலை வகித்தாா்.

அறங்காவலா் குழு தலைவா் மு.செல்லையா, உறுப்பினா் சொனா. வெங்கடாசலம், செயல் அலுவலா் வெங்கடேஸ்வரன், கண்காணிப்பாளா் முருகன் ஆகியோா் மேற்பாா்வையில் காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது. இதில், ஆசிரியா்கள் சொக்கலிங்கம், ரவி, செந்தில் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள், ராஜபாளையம் ராஜகோபுரம் சேவா குழு, ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

ரூ.23 லட்சத்து 47 ஆயிரத்து 66 ரொக்கமும், 15.100 கிராம் பல மாற்றுப் பொன் இனங்களும், 171. 800 கிராம் பலமாற்று வெள்ளி இனங்களும், வெளிநாட்டுப் பணத்தாள்கள் 110-ம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.