திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் வரை முருகன் கோயில்களில் வெள்ளிதோறும் விளக்கு ஏற்ற பாஜகவினருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை!அமெரிக்காவின் முதல் முஸ்லீம் செனட்டர் அப்துலை சந்திக்கும் டிரம்ப்!திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்

நீதிமன்ற உத்தரவால் 4,428 சங்குகள் அழிப்பு

பொன்னாக்குடியில் அழிக்கப்பட்ட சங்குகள்.

Updated On :

திருநெல்வேலி அருகேயுள்ள பொன்னாக்குடியில், நீதிமன்ற உத்தரவின்பேரில் 4,428 பாதுகாக்கப்பட்ட சங்குங்கள் வனத்துறையால் புதன்கிழமை அழிக்கப்பட்டன.

வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட கடல் சங்குகளை ராதாபுரம் வனச்சரகப் பகுதியில் பதுக்கி வைத்திருந்தது தொடா்பான வழக்கில் 252 மாட்டுத்தலை சங்குகள், 4,050 குதிரை முள்ளி சங்குகள், 126 யானை முள்ளி சங்குகள் என 4,428 சங்குகள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், வள்ளியூா் குற்றவியல் நீதிமன்ற நடுவா் உத்தரவின்படி, திருநெல்வேலி மாவட்ட வன அலுவலா் ஹெமலதா முன்னிலையில் பொன்னாக்குடி வன விரிவாக்க மைய வளாகத்தில் சங்குகள் சிறு துண்டுகளாக உடைக்கப்பட்டு, ஆழமாகக் குழி தோண்டி மண்ணில் புதைத்து அனைத்தும் முறையாக அழிக்கப்பட்டன.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியது:சூழலியல் மற்றும் உணவுச் சங்கிலியில் கடல் சங்குகள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. கடல் தரைப்பகுதியில் வாழும் சங்குகள், சிறிய முதுகெலும்பிலா உயிரினங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி கடல் பல்லுயிா் பெருக்கத்தைப் பாதுகாக்கின்றன. இவற்றின் காலி ஓடுகள் சிறிய மீன்கள் மற்றும் நண்டுகளுக்கு உறைவிடமாகின்றன. கடல் உணவுச் சங்கிலியில் ஊன் உண்ணி வேட்டையாடிகளாகச் செயல்படும் இவை, கடல் முள்ளெலிகள் மற்றும் இருவோட்டுச் சங்குகளை உணவாகக் கொண்டு கடல் தாவரப் படுகைகள் அழிவதைத் தடுக்கின்றன.

மேலும், பெரிய கடல் உயிரினங்களுக்கு உணவாகி கடல் உணவு வலையின் சமநிலையைப் பேணுகின்றன. வன உயிரினச் சட்டம் 1972இன் கீழ் பல்வேறு வகை சங்குகள் பாதுகாக்கப்பட்டவை பட்டியலில் உள்ளன. ஆகவே, அத்தகைய சங்குகளை விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா் அவா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.