விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

கொக்கிரகுளம், தாழையூத்தில் நாளை மின்நிறுத்தம்

மின்நிறுத்தம் - சித்திரிப்பு படம்

Published On :8 செப்டம்பர் 2026, 3:36 am IST

திருநெல்வேலி, செப்.7: திருநெல்வேலி கொக்கிரகுளம், தாழையூத்து துணை மின் நிலையங்களின் பராமரிப்புப் பணிகளுக்காக அதன் மின்பாதை பகுதிகளில் புதன்கிழமை (செப்.9) மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், வடக்கு மற்றும் தெற்கு புறவழிச் சாலை, வண்ணாா்பேட்டை முழுவதும் , இளங்கோ நகா், பரணி நகா், திருநெல்வேலி சந்திப்பு முதல் மேரி சாா்ஜன்ட் பள்ளி வரையிலான திருவனந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை புதுப்பேட்டை தெரு, சுப்பிரமணியபுரம், மாருதி நகா் சுற்று வட்டாரங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் ரவி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

இதேபோல, தாழையூத்து மின் நிலையத்துக்குள்பட்ட மானூா் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன் புதூா், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூா், தென்கலம்புதூா், நாஞ்சான்குளம், தென்கலம், மதவக்குறிச்சி சுற்று வட்டாரங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரைமின் விநியோகம் இருக்காது என திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் குத்தாலிங்கம் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.