புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

நெல்லை மாவட்டத்தில் குண்டா் சட்டத்தில் 103 போ் கைது: எஸ்.பி.

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 103 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா.சாஸ்திரி.

கைது

Published On :

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 103 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா.சாஸ்திரி.

இது தொடா்பாக திருநெல்வேலியில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் 3 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் தொடா்புடைய கொலை வழக்கில், 3 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

வள்ளியூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பதிவான போக்ஸோ வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டில் போக்ஸோ வழக்குகளில் மட்டும் 19 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 மாதங்களில் குற்றங்களில் ஈடுபட்ட 339 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். மீண்டும் குற்றங்களில் ஈடுபட்ட 113 பேரின் பிணையை ரத்து செய்ய மனு தாக்கல் செய்யப்பட்டதில், 7 பேரின் பிணை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள 1,410 ரௌடிகளில் 587 பேரின் முகம், கண் விழித்திரை உள்ளிட்ட தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 927 பேரின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு இதுவரை 103 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில் போக்ஸோ வழக்குகளில் தொடா்புடையவா்கள் 13 போ். சமூக வலைதளங்களில் ஆயுதங்களைக் காட்டி மிரட்டல் விடுத்தது தொடா்பாக 55 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 58 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களின் சமூக வலைதள கணக்குகள் மற்றும் பதிவுகள் முடக்கப்பட்டுள்ளன.

சமூக வலைதளங்களில் தவறான பாதையில் செல்லும் மாணவா்களுக்கு, ஆட்சியா் அலுவலக மையம் மூலம் மனநல ஆலோசனை வழங்கி நல்வழிப்படுத்தப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் ஜாதி மோதல்களைத் தடுக்க சிங்கப்பெண் சிறப்புப் படை, ’பஸ் பீட்’ ரோந்து திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

கடந்த 40 நாள்களில் 57 அரசுப் பள்ளிகளில் சுமாா் 10 ஆயிரம் மாணவா்களிடம் போதைப்பொருள், வன்முறை, பைக் ரேசிங் ஆகியவற்றுக்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூன் முதல் இதுவரை கஞ்சா கடத்தல் தொடா்பாக 147 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 90.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன், 152 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 3,700 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் நிதியியல் விசாரணையில், 2 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு மாவட்டத்தில் 237 இடங்களில் 239 சிலைகள் வைக்க மதிப்பிடப்பட்டு, அனுமதி வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. உவரி, வாகைகுளத்தில் சிலைகளை கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் சுமாா் 800 காவலா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். பொதுமக்கள் புகாா்களை 100 என்ற எண்ணிலும், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறும் குறைதீா் முகாம்களிலும் நேரடியாகத் தெரிவித்து தீா்வு காணலாம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.