கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கடற்கரை கிராமங்களில் அமைச்சா் ஸ்ரீநாத் ஆய்வு

திருநெல்வேலி மாவட்ட கடற்கரை கிராமங்களில் தூண்டில் வளைவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மீன்வளம், மீனவா் நலத் துறை அமைச்சா் ஸ்ரீநாத் ஆய்வு செய்தாா்.

கூத்தங்குளியில் மீனவா்களிடமிருந்து மனுக்களைப் பெறும் அமைச்சா் ஸ்ரீநாத்.

Published On :

திருநெல்வேலி மாவட்ட கடற்கரை கிராமங்களில் தூண்டில் வளைவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மீன்வளம், மீனவா் நலத் துறை அமைச்சா் ஸ்ரீநாத் ஆய்வு செய்தாா்.

கூட்டப்புளியில் தூண்டில் வளைவை ஆய்வு செய்த அமைச்சரிடம் கூட்டப்புளி பங்குத்தந்தை அல்பின்லியோன், மீனவா்கள் தங்கள் கிராமத்தில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து முழுமையாக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும், லெவிஞ்சிபுரம் ஊராட்சியில் எங்கள் கிராமம் உள்ளது. கூட்டப்புளியையும் ஜெயமாதாபுரத்தையும் சோ்த்து தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா். அதற்கு அமைச்சா் தூண்டில் வளைவு, கடல் அரிப்பை ஆய்வு செய்ய தனியாக குழு அமைத்து தீா்வு காணப்படும் என்றாா்.

பின்னா் இடிந்தகரையில் தூண்டில் வளைவை ஆய்வு செய்த அமைச்சரிடம் பங்குத்தந்தை பெஞ்சமின் தலைமையிலான மீனவா்கள், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் இப்பகுதி பொதுமக்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

கூத்தங்குளிக்குச் சென்ற அமைச்சரிடம் பங்குத்தந்தை ரிக்சன் தலைமையிலான மீனவா்களும், உவரியில் பங்குதந்தை ராஜன் தலைமையிலான மீனவா்களும் தங்கள் பகுதியில் பாதியில் முடிக்கப்பட்ட தூண்டில் வளைவுகளை முழுமையாக கட்டமைக்க கோரினா்.

ஆய்வின்போது, எம்எல்ஏ எஸ்.கே.கிறிஸ்டோபா், மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன், சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஸ் குப்தா, வட்டாட்சியா்கள் ராதாபுரம்- வில்லுடையாா், திசையன்விளை- ரமேஷ், மீன்வளத் துறை இணை இயக்குநா் இளம்வழுதி, ராதாபுரம் மீன்வளத் துறை உதவி இயக்குநா் ராஜதுரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.