தச்சநல்லூா் மண்டலத்தில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு
தச்சநல்லூா் மண்டலத்தில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

தச்சநல்லூா் மண்டலம் இந்திரா காலனி பகுதியில் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா் மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா.
தச்சநல்லூா் மண்டலம், 9 ஆவது வாா்டுக்குள்பட்ட இந்திரா காலனி பகுதிகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதார கழிவுகள், சிறப்பு கவன கழிவுகள் என தரம் பிரித்து பொதுமக்களிடமிருந்து வீடுகள்தோறும் தூய்மைப் பணியாளா்கள் சேகரிக்கும் பணியினை மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் போது வீடுகளை சுற்றுச்சூழல் பாதுகாப்போடு வைத்திருப்பதோடு, குப்பைகளை எளிதாக மறு சுழற்சி செய்ய வாய்ப்பாக அமையும் என பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். மேலும், வீடுகளில் கொசுப்புழு உற்பத்தியாவதைத் தடுக்கும் வகையில் பழைய பொருள்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





