"கதர் விற்பனை: நிகழாண்டில் ரூ.1.50 கோடிக்கு இலக்கு'
கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழாண்டில் கதர் ரகங்களை


கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழாண்டில் கதர் ரகங்களை ரூ.1.50 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் தெரிவித்தார்.
காந்தி ஜயந்தியையொட்டி, நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள கதர் அங்காடியில் செவ்வாய்க்கிழமை காந்தியடிகள் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி சிறப்பு விற்பனையைத் தொடங்கிவைத்து ஆட்சியர் பேசியதாவது:
கதர் கிராம தொழில் வாரிய பொருள்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையிலும், கதர் பொருள்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி சிறப்பு விற்பனையை அரசு மேற்கொண்டு வருகிறது.
சிறப்பு விற்பனையின்போது கதர் ரகங்களுக்கு 30 சதவிகிதம் அரசு தள்ளுபடி வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு குமரி மாவட்டத்துக்கு கதர் விற்பனை குறியீடாக ரூ.85 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ரூ.95 லட்சம் மதிப்புள்ள கதர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டன.நிகழாண்டில் விற்பனை இலக்கு ரூ.1.50 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்குறியீட்டை அடைய பொதுமக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கதர் ரகங்களையும், பொருள்களையும் வாங்கி ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் கதர் கிராமத் தொழில்கள் உதவி இயக்குநர் அருணாசலம், பி.ஆர்.ஓ. ஹரிராம், கூட்டுறவு ஒன்றிய தனிஅலுவலர் நம்பிநாதன், விற்பனை நிலைய மேலாளர் மனோகரன், கதர் ஆய்வாளர்கள் ரமணிபாய், கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மாவட்டத்தில் நாகர்கோவில், கன்னியாகுமரி, கருங்கல், அருமனை, குளச்சல், மார்த்தாண்டம் ஆகிய கதர் விற்பனை நிலையங்களிலும், திங்கள்நகர், குளச்சல், கன்னியாகுமரி, ராணித்தோட்டம், படந்தாலுமூடு, மார்த்தாண்டம், திருவட்டார் ஆகிய அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனைகளில் உள்ள தாற்காலிக விற்பனை நிலையங்களிலும், ராஜாக்கமங்கலம், தக்கலை, குருந்தன்கோடு, முன்சிறை, கிள்ளியூர், திருவட்டார், மேல்புறம், தோவாளை மற்றும் அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியங்களிலும் கதர் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த விற்பனை நிலையங்களில் கதர் வேட்டிகள், துண்டு ரகங்கள், ரெடிமேட் சட்டைகள், இலவம் பஞ்சில் தயாரிக்கப்பட்ட மெத்தைகள் மற்றும் தலையணைகள், கண்கவர் கதர் பட்டு பாலிஸ்டர் ரகங்கள், உல்லன் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...