கடலோர காவல் படையில் சேர பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு சான்றிதழ்
கடல்படை மற்றும் கடலோர காவல்படையில் சேர சிறப்பு பயிற்சி பெற்ற குமரி மாவட்ட மீனவ இளைஞர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகளை ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் வழங்கினார்.


கடல்படை மற்றும் கடலோர காவல்படையில் சேர சிறப்பு பயிற்சி பெற்ற குமரி மாவட்ட மீனவ இளைஞர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகளை ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் வழங்கினார்.
மீன்வளத்துறை மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமம் இணைந்து நடத்திய, மீனவ இளைஞர்களுக்கான இந்திய கடல்படை மற்றும் இந்திய கடலோர காவல் படையில் சேருவதற்கான சிறப்பு பயிற்சி நிறைவு நாள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில், பயிற்சியில் கலந்துகொண்ட இளைஞர்களுக்கு, பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகளையும் வழங்கி ஆட்சியர் பேசியது: தமிழக முதல்வர் மீனவர் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு, இந்திய கப்பல்படை, இந்திய கடலோர காவல்படை மற்றும் ஆயுதப்படை பிரிவுகளில், வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில், பயிற்சிகள் அளிக்க வேண்டும் என அறிவித்திருந்தார். அதன்படி, கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மீனவர் கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களிடமிருந்து, பயிற்சிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இப்பயிற்சியானது, தமிழ்நாடு மீன்வளத்துறை மற்றும் கடலோர காவல் குழுமம் மூலம் 3 மாதம் நடைபெற்றுள்ளது. இப்பயிற்சியில், அளிக்கப்பட்ட பொது அறிவு, அன்றாட நாட்டு நடப்பு, ஆங்கிலம் மற்றும் உடல்தகுதிகள்
வளர்த்துக்கொள்ளும் விதங்களை இனிவரும் காலங்களிலும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். மேலும், தினசரி நாளிதழ்கள், இணையதளம் ஆகியவற்றில் வேலை வாய்ப்புச் செய்திகளை, நீங்கள் தெரிந்து கொள்வதோடு, அத்தேர்வில் பங்கேற்க வேண்டும். குறிப்பாக, பயிற்சியில் வழங்கப்பட்ட அறிவுரைகளை, ஒரு அடித்தளமாக வைத்துக்கொண்டு மற்ற தேர்வுகளிலும் பங்கேற்க வேண்டும். தேர்வில் வெற்றிபெற, தினமும் 3 அல்லது 4 மணி நேரம் ஒதுக்க வேண்டும். அதேபோல், உடல்தகுதி பெற, தினமும் உடல்பயிற்சி செய்ய வேண்டும். தேர்வில் வெற்றி பெறும்வரை, விடாமுயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
பின்னர், பயிற்சி பெற்ற 30 இளைஞர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார். எழுத்துத்தேர்வில் நன்றாக தேர்வு எழுதிய திருநெல்வேலி மாவட்டம், கூட்டப்புளியைச் சேர்ந்த சகாய அமல கிளிண்டன் மற்றும் ஏ. சூசை ஜெபிக் ஜில்டன் ஆகியோர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களுடன் நினைவுப் பரிசுகளும், உடல்தகுதி தேர்வில் சிறந்து விளங்கிய கன்னியாகுமரி மாவட்டம், வள்ளவிளையைச் சேர்ந்த ஜெ. ஜெரின்ஜான் மற்றும் கோடிமுனையைச் சேர்ந்த மிதுன்சன் ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ்களுடன் நினைவுப் பரிசுகளும், அனைத்து பயிற்சிகளிலும் சிறப்பான முறையில் செய்து, சிறந்து விளங்கிய திருநெல்வேலி மாவட்டம், கூட்டப்புளியை சேர்ந்த ஏ. சூசை ஜெபிக் ஜில்டனுக்கு பாராட்டுச்சான்றிதழும், நினைவு பரிசும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை, மீன் வளத்துறை துணை இயக்குநர் வே. லாமேக் ஜெயகுமார், தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழும காவல் துணை கண்காணிப்பாளர் ஸ்டான்லி ஜோன்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...